அதிகமாக அறியப்படாத இந்த சர்ப்பா நீர்வீழ்ச்சி அவசியம் விஜயம் செய்ய வேண்டிய ஒரு ஸ்தலமாகும். இது கேரளா மற்றும் தமிழ்நாட்டை இணைக்கும் நெடுஞ்சாலைப்பகுதியில் உள்ளது.
திரிசூர் நகரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி ஒரு பெருக்கெடுத்து வழியும் அருவி இல்லை என்றாலும் கூட மழைக்காலத்தில் இங்கு சாலையில் கூட நீர் வழிந்து ஓடக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.
வெறும் 25 அடி உயரத்திலிருந்து வழியும் அருவிதான் இது என்ற போதிலும் பிரம்மாண்டமான பாறைகளில் வலிமையுடன் நீர் வழியும் காட்சி கண்ணைக்கவரும் அற்புதமாக தோன்றும் என்பதில் சந்தேகமில்லை.
சாலக்குடி ஆற்றின் வழியில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி ‘ இந்தியாவின் நயாகரா’ என்றும் அழைக்கப்படுகிறது. தில் ஸே, குரு, இருவர் போன்ற திரைப்படங்களில் இந்த நீர்வீழ்ச்சி இடம்பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications