Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திரிசூர் » ஈர்க்கும் இடங்கள் » திருவம்பாடி கிருஷ்ணா கோயில்

திருவம்பாடி கிருஷ்ணா கோயில், திரிசூர்

46

கிருஷ்ண பக்தர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆன்மீக திருத்தலமாக இந்த திருவம்பாடி கிருஷ்ணா கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. பல நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ள இக்கோயிலைப்பற்றி ஏராளமான புராணிகக்கதைகளும் கூறப்படுகின்றன.

இது திரிசூரின் பிரசித்தமான ஸ்வராஜ் ரவுண்ட் பகுதிக்கு வெகு அருகில் அமைந்துள்ளது. இக்கோயில் காலை 5 மணியிலிருந்து 11 மணி வரை திறக்கப்படுகிறது. பிரசித்தமான திரிசூர் பூரம் திருவிழாவில் பங்கு பெறும் இரண்டு முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

திரிசூர் பகுதியின் இரண்டு மண்டலங்களின் சார்பாக இந்த இரண்டு கோயில்களும் பூரம் திருவிழாவில் பங்கேற்பது 200 வருடங்களாக தொடரும் மரபாக அறியப்படுகிறது. வாண வேடிக்கைகளுடன் தங்க சரிகை அணிகள் பூட்டிய யானைகள் ஊர்வலமாக வருவது இந்த திருவிழாவின் கண்கொள்ளா காட்சியாகும்.

உலகில் மிகச்சிறந்த கோலாகலத் திருவிழாக்களில் ஒன்றாக திரிசூர் பூரம் திருவிழாவை ‘யுனெஸ்கோ’ அமைப்பு அங்கீகரித்திருப்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாகும். வெயில் மற்றும், ஈரப்பதத்தை உங்களால் சகித்துக்கொள்ள முடியுமெனில், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இடம் பெறும் இத்திருவிழாவை கண்டு மகிழ்வது ஒரு மறக்க முடியா அனுபவமாக இருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed