திரிசூர் நகரத்தில் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒரு அம்சம் இந்த வடக்கும்நாதன் கோயிலாகும். தென்கைலாசம் அல்லது விருட்சபாசலம் என்ற சிறப்புப்பெயர்களாலும் அறியப்படும் இந்த கோயில் சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. விஷ்ணு பஹவானின் அவதாரமான பரசுராமரால் கட்டப்பட்ட முதற்கோயில் இது என்பதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.
முதற்பார்வையிலேயே யாரையும் உருக்கிவிடும் எளிமையான புராதானத்தோற்றம் மற்றும் தெய்வீகப்பிரகாசத்துடன் இந்த கோயில் வீற்றிருக்கிறது. கலையம்சத்துடன் செதுக்கப்பட்டுள்ள மரச்சிற்ப வேலைப்பாடுகளில் புராணிகக்கதைகள் மற்றும் மஹாபாரத நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டுள்ளதை இக்கோயிலில் காணலாம்.
கூத்து, நடனம் போன்ற கலைவடிவங்களுக்காக இந்த கோயில் வளாகத்திலேயே கூத்தம்பல மண்டபமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கூத்தம்பலத்தின் மேடையானது கோயில் கருவறைக்கு சமமான புனித பீடமாக கலைஞர்களாலும் பக்தர்களாலும் மதிக்கப்படுகிறது.
தெக்கிக்காடு மைதானம் என்னும் இடத்தில் இந்த வடக்கும்நாதன் கோயில் அமைந்துள்ளது. உலகப்பிரசித்தி பெற்றுள்ள திரிசூர் பூரம் திருவிழா இக்கோயிலில் கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications