Search
  • Follow NativePlanet
Share
» »காதலர் தினத்தை ரொமான்டிக்காக கொண்டாட ஏற்ற 10 இந்திய நகரங்கள்

காதலர் தினத்தை ரொமான்டிக்காக கொண்டாட ஏற்ற 10 இந்திய நகரங்கள்

காதலை கொண்டாடும் காதலர் தினத்தில் உங்கள் துணையுடன் தனியாக, தூரமான ஒரு இடத்திற்கு சென்று காதலர் தினத்தை ரொமான்டிக்காக கொண்டாட திட்டமிடுகிறீர்களா? அப்படியானால் இந்தியாவின் ரொமான்டிக்கான இந்த நகரங்களில் ஒன்றை நீங்கள் தாராளமாக தேர்வு செய்யலாம். காதலை, அன்பை பரிமாறிக் கொள்ளவும், இனிய அனுபவங்களை பெறுவதற்கும் ஏற்ற இடமாக நிச்சயமாக இவைகள் இருக்கும்.

10 Romantic towns to celebrate Valentine s Day with your partner

ஆலப்புழா

கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள பசுமையான நிலப்பரப்புகள், அமைதியான சூழல் ஆகியவை காதலை கொண்டாட ஏற்ற இடம். இங்குள்ள ஹவுஸ் போட்டில் தங்கி பொழுதை கழிப்பதாக இருந்தாலும் சரி, கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி இரவு உணவு ருசிப்பதாக இருந்தாலும் சரி ரொமான்டிக்கான மூடிற்கு உங்களை மாற்றும் அதிகமான சூழல்கள் இங்கு உள்ளது. காதலர் தினத்தை கொண்டாட ஏற்ற இடமாக இது இருக்கும்.

மகாபலிபுரம்

உங்கள் காதலர் அல்லது லைஃப் பார்ட்னர் வரலாற்று சின்னங்கள், அழகான கலைகளை ரசிக்க விரும்புபவரா இருந்தால் நீங்கள் அழைத்துச் செல்ல வேண்டிய இடம் மகாபலிபுரம் தான். இந்தியாவின் பாரம்பரிய தலங்களில் ஒன்றான இங்குள்ள சிற்பங்கள், கலை நுணுக்கங்கள், அருங்காட்சியங்கள், அழகான பீச், சன் செட்டை கண்டு மகிழ அழகான இடங்கள், மாலை நேரத்தில் விளக்கு ஒளியின் வெளிச்சத்தில் இனிமையான நினைவுகளை, மனதின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள காதலர்களுக்கு ஏற்ற இடமாக இருப்பது மகாபலிபுரம்.

10 Romantic towns to celebrate Valentine s Day with your partner

மூணாறு

கேரளாவில் உள்ள மனதை உருக வைக்கும் இடங்களில் ஒன்று. மலைகள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள், காதல் உணர்வுகளை பொங்க செய்யும் நீர்வீழ்ச்சிகள் என பார்ப்பதற்கு இங்கு ஏராளமான இடங்கள் உள்ளது. இயற்கையை ரசித்த படி புதிதாக ஒரு உலகத்திற்கு சென்று வந்த உணர்வை தர, உங்களின் காதலை பரிமாற என காதல் தினத்தை மறக்க முடியாத அனுபவமாக கொண்டாடி மகிழ ஏற்ற இடம் இது.

புதுச்சேரி

அழகான தெருக்கள், வண்ணமயமான பிரெஞ்சு மாடல் கட்டிடங்கள், கடற்கரைகள் என இந்தியாவில் ஐரோப்பாவின் ஒரு பகுதியாக இருக்கும் புதுச்சேரி காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாட ஏற்ற இடம். ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஜோடியாக ஊரை சுற்றி, வித்தியாசமான ஒரு அனுபவமாக, கடல் காற்றுடன் காதலை அழகாக பரிமாறிக் கொள்ள இதமான ஏற்ற இடமாக இருப்பது புதுச்சேரி. காதலர் தினத்தை கொண்டாட சென்னையிலிருந்து சென்று வரவும் ஏற்ற இடமாக புதுச்சேரி உள்ளது.

ஷில்லாங்

உங்கள் காதல் பார்டினரை நீண்ட தூரம் அழைத்துச் சென்று காதலர் தினத்தை கொண்டாட விரும்பினால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் தான். கிழக்கு ஸ்காட்லாந்து என அழைக்கப்படும் இங்கு, மூச்சு முட்ட செய்யும் அளவிற்கு அழகான இயற்கை காட்சிகள், குளிர்ச்சியான இதமான சூழல் என அனைத்தும் சரியான விகிதத்தில் இருக்கும். இங்குள்ள தெற்குளில் நடந்து செல்வது, பனி மூடிய மலைகளை கண்டு ரசிப்பது, காதலில் புதிய அனுபவத்தை ஏற்படுத்தும். காதலர் தினத்தில் உங்களை பார்ட்னரின் மனதை கவர ஏற்ற இடமாக இது இருக்கும்.

10 Romantic towns to celebrate Valentine s Day with your partner

குமரகம்

காதலர் தினத்தில் உங்களின் காதல் துணைக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தீர்கள் என்றால் நீங்கள் அழைத்துச் செல்ல வேண்டிய இடம் கேரளாவில் உள்ள குமரகம் தான். சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்திருக்க போட்ஹவுஸில் ரொமான்டிக்காக உங்கள் துணையுடன் காதலர் தினத்தை கொண்டாட ஏற்ற இடம். தென்னந் தோப்புகளால் சூழப்பட்ட அமைதியான இடங்கள் வழியாக நீங்கள் செல்லும்போது உங்களின் மனதில் உள்ள காதலை...அன்பை இயற்கையோடு சேர்ந்து அமைதியாக பகிரலாம்.

கூர்க்

எங்கு திரும்பினாலும் பச்சை போர்வையை போர்த்தியது போல் பசுமை நிறைந்திருக்கும் இடமாக இருப்பது கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்க் பகுதியாகும். இயற்கை காட்சிகள், மேகக் கூட்டங்கள், வசதியான தங்குமிடங்கள், நீர்வீழ்ச்சிகள் என அழகு கொட்டி கிடக்கின்றது. பனிமூட்டம் நிறைந்த மலைகள் வழியாக பயணம், நெருப்பின் இதமான கதகதப்பில் குளிர் காய்ந்தபடியே காபியை சுவைத்து மகிழ்ந்த படி, காதல் துணையுடன் ரொமான்டிக்கான பொழுதுகளை கழிக்க ஏற்ற இடம்.

உதய்பூர்

வட மாநிலங்களுக்கு சுற்றுலா சென்று காதலர் தினத்தை கொண்டாட நினைத்தால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர். ஏரிகள், பளபளக்கும் அரண்மனைகள் என பெயர் பெற்ற நகரம். காதலின் நகரம் என்றும் இதை சொல்லலாம். ஆரவல்லி மலைத்தொடர்கள் அதற்கு பின்னால் மறையும் சூரியனின் அழகான காட்சி, படகு சவாரி, சிட்டி பேலஸ், எளிமையான உணவகங்கள், நட்சத்திரங்களுக்கு கீழே இரவு உணவை சாப்பிட்டு கொண்டு இதமாக ரசித்து மகிழ ஏற்ற இடமாகவும், காதலை சொல்வதற்கு ஏற்ற நகரமாக உள்ளது.

புஷ்கர்

புஷ்கர், ராஜஸ்தானின் மற்றொரு காதல் நகரம் இது. ஒட்டகம் சவாரி மிகவும் பிரபலம் வாய்ந்த இடம். தங்கம் போல் நிறைந்திருக்கும் விரிந்த மணல் பரப்புகள், விதவிதமாக ஷாப்பிங் செய்து மகிழ ஏற்ற கடைத்தெருக்கள், சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை ரசிப்பதற்கு ஏற்ற இடம். ஏரியில் பயணித்த படி, உள்ளூர் தேநீரையும் ருசித்த படி, இதமான, அமைதியான சூழலில் காதலர் தினத்தை கொண்டாடி மகிழலாம்.

More News

Read more about: valentines day tamil nadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+