Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விமான நிலையம் போல லவுஞ்ச் – இலவச வைஃபை, உணவு, தங்குமிடம்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விமான நிலையம் போல லவுஞ்ச் – இலவச வைஃபை, உணவு, தங்குமிடம்!

நம்ம சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விமான நிலையம் போல லவுஞ்ச் வசதி இருக்கிறது தெரியுமா? பயணிகளுக்காக 24 மணி நேரமும் திறந்து இருக்கும் இந்த எக்சிகியூட்டிவ் லவுஞ்சில் வசதியாக ஓய்வெடுக்க சோபா வசதி, ரெக்லைனர்ஸ், பாத்ரூம்கள், தூங்கும் பாட் வசதிகள், அளவில்லா உணவு, இலவச தேநீர் மற்றும் காபி கிடைக்கிறது. நீங்கள் ரயிலுக்காக காத்திருக்கும் நேரத்தில் இந்த இடங்களில் ஓய்வெடுக்கலாம்!

விமான நிலையம் போன்ற கட்டமைப்பில் லவுஞ்ச் வசதி

புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விமான நிலையம் போன்ற வசதிகளுடன் கூடிய முதல் வகை எக்ஸிகியூட்டிவ் லவுஞ்ச் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரயில்களுக்கு காத்திருக்கும் நேரத்தில் இந்த லவுஞ்சில் ஓய்வெடுக்கலாம். வழியனுப்ப வந்தவர்களும் இந்த இடத்தை உபயோகிக்கலாம். சென்னை சென்ட்ரலில் இருந்து வேறு எங்காவது வேலை நிமித்தமாக செல்பவராக இருந்தாலும் இங்கே ரெடியாகி நீங்கள் கிளம்பி செல்லலாம்.

inejexecutivelounge

வசதியான ஓய்வுக்கு உத்திரவாதம்

பிளாட்பார்ம் எண் 6 க்கு அருகில் உள்ள பிரதான வளாகத்தில் அமைந்துள்ள இந்த லவுஞ்ச் 180 பயணிகளுக்கு இடமளிக்கும் மற்றும் 112 ஒற்றை சோஃபாக்கள் மற்றும் 10 சாய்வு அறைகள் உள்ளன. கூடுதலாக 18 சிங்கிள் ஸ்லீப்பிங் பாட்கள் மற்றும் நான்கு டபுள் ஸ்லீப்பிங் பாட்கள் உள்ளன. இதனால் தனிப் பயணிகள் மற்றும் குடும்பங்கள் பயன் பெறுகின்றன. நீங்கள் தனி நபராக வந்தாலும் அல்லது குடும்பத்துடன் வந்தாலும் இந்த இடம் உங்களுக்கு வசதியான ஓய்வை வழங்குகிறது.

சட்டென ரெடியாகி வெளியே கிளம்புவதற்கும் வசதியுண்டு

சைவம் மற்றும் அசைவ உணவுகளை வழங்கும் சுழற்சி பஃபே ஓய்வறையில் கிடைக்கிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கழிவறைகள், குளிப்பதற்கும் மாற்றுவதற்கும் பிரத்யேக இடங்கள் மற்றும் தனித்தனி லக்கேஜ் ரேக்குகள் ஆகியவை மற்ற வசதிகளில் சில. இந்த வசதி உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் பயணிகள் இருவரும் நிலையத்தில் தங்கியிருக்கும் குறுகிய காலத்தில் ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

inejexecutivelounge chennai

கட்டணங்கள் என்ன?

இலவச வைஃபை மற்றும் டீ/காபியுடன் ஒரு மணிநேரம் தங்குவதற்கு நுழைவுக் கட்டணம் ரூ.200 ஆகும். தண்ணீர் பாட்டில், சிறப்பு வரவேற்பு பானம், வைஃபை, போர்வை, தலையணை மற்றும் படுக்கை விரிப்புகள் ஆகியவற்றுடன் மூன்று மணி நேரத்துக்கு ஒரு தூக்கம் போடுவதற்கான நுழைவுக் கட்டணம் ரூ.840 ஆகும்.கட்டணமானது வசதிகள்/காலத்திற்கு ஏற்ப மாறுபடும் மற்றும் சுழற்சி பஃபேயுடன் கூடிய பேக்கேஜாகவும் வருகிறது.

சரியாக எங்கே இருக்கிறது? யாரெல்லாம் செல்லலாம்?

இந்த இனெஜ் எக்சிகியூட்டிவ் லவுஞ்ச் என்றழைக்கப்படும் இந்த லவுஞ்சுக்குள் நீங்கள் செல்ல உங்களிடம் PNR நம்பர், ரயில் டிக்கெட் அல்லது பிளாட்பாரம் டிக்கெட் இருக்க வேண்டும். இது சரியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 6 ஆவது பிளாட்பாரத்தில் அப்போலோ மருந்தகத்திற்கு எதிரே உள்ளது. நீங்கள் ரயிலுக்காக காத்திருக்கவில்லை என்றாலும், என்றாவது நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக ஒரு அவுட்டிங் போல செல்லலாம்.

inejexecutivelounge services

இங்கே இருக்கும் வசதிகள் என்னென்ன

1. இலவை வைஃபை

2. 24*7 திறந்திருக்கிறது

3. வசதியான சோபா

4. சாய்ந்து ஓய்வெடுக்கும் ரெக்லைனர்

5. தனிப்பயனர்களுக்கான தூங்கும் பாட் வசதிகள்

6. குடும்பங்களுக்கான தூங்கும் பாட் வசதிகள்

7. குளியலறை, கழிவறை

8. லக்கேஜ் ரேக்குகள்

9. அளவில்லா பஃபெட்டில் வித வித உணவுகள்

10. இலவச தேநீர் மற்றும் காபி

நீங்கள் அடுத்த முறை சென்னை சென்ட்ரலில் காத்திருந்தால் இங்கே செல்லுங்கள்!

More News

    Read more about: chennai executive lounge
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+