Search
  • Follow NativePlanet
Share
» »தூத்துக்குடி-திருநெல்வேலி கார் அல்லது பைக்கில் பயணம் செய்கிறீர்களா – இதை படிச்சிட்டு போங்க!

தூத்துக்குடி-திருநெல்வேலி கார் அல்லது பைக்கில் பயணம் செய்கிறீர்களா – இதை படிச்சிட்டு போங்க!

நீங்க தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு காரிலோ, பைக்கிலோ அல்லது குடும்பமாக சுற்றுலா செல்கிறீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்குத் தான்! நாங்கள் உங்களுக்காக தரமான, ருசியான சைவ மற்றும் அசைவ உணவகங்களின் பட்டியலை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்! நீங்கள் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு பயணம் செய்யும் போது இவற்றில் ஏதோ ஒரு உணவகத்தில் சாப்பிட்டு செல்லுங்கள், நிச்சயம் வருத்தப்பட மாட்டீர்கள்!

இந்த உணவகங்கள் எல்லாம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ளது. அனைத்து உணவகங்களின் தூரமும் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைச் சொல்கிறோம். இப்போது உங்கள் பசியைப் போக்க நீங்கள் எந்த உணவகத்தைத் தேர்வு செய்கிறீர்கள் என்பது உங்களுடையது, ஆனால் இங்கே நீங்கள் சிறந்த உணவு மற்றும் சுற்றுச்சூழலைப் பெறுவீர்கள் என்பது உறுதி!

Hotel sri madhuram

ஹோட்டல் ஸ்ரீ மதுரம்

ஹோட்டல் ஸ்ரீ மதுரம் என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள ஒரு பிரீமியம் சைவ உணவகம் ஆகும். அவர்கள் ஆண்டு முழுவதும் உண்மையான தென்னிந்திய வெஜ் ரெசிபிகளை உருவாக்குகிறார்கள். தங்கள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தவும் மகிழ்ச்சியடையச் செய்யவும் ஒரு பிரதான இலக்குடன், அவர்கள் தரம் மற்றும் சுவையில் சமரசம் செய்து கொள்வதில்லை. அவர்கள் ஒரு அற்புதமான உணவு மெனுவைக் கொண்டுள்ளனர், நீங்கள் டேஸ்ட் செய்யும் அனைத்தும் நிச்சயம் தரமானதாக இருக்கும். இந்த ஹோட்டல் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 6.2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

Kiramathu virundhu

கிராமத்து விருந்து சைவ மற்றும் அசைவ விருந்து

திருநெல்வேலி பேருந்து நிலையத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கிராமத்து சைவ மற்றும் அசைவ விருந்து உணவகம் திருநெல்வேலி சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு ருசியான தரமான உணவகமாகும். இந்த ஹோட்டல் கந்தசாமி புரம், தூத்துக்குடி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இங்கே நீங்கள் ருசியனா கறிக் குழம்பு, மீன் வறுவல், அசைவ சாப்பாடு, சிக்கன் மற்றும் மட்டன் ஆகியவற்றை ருசிக்கலாம். அதுமட்டுமல்ல, இங்கே நீங்கள் தரமான சைவ உணவு வகைகளையும் ருசிக்கலாம்.

Imblas hotel

IMBLAS சைவ மற்றும் அசைவ ஹோட்டல்

முறப்பநாடு கோயில் நுழைவுச் சந்திப்பிற்கு முன்பு 1.6 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த உணவகம் பார்ப்பதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கலாம். ஆனால் தூத்துக்குடி-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் மிகவும் ருசியான மற்றும் தரமான உணவுகளை வழங்கும் நல்ல உணவகங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த உணவகத்தில் பிரியாணி துவங்கி, பிரைடு ரைஸ், நூடுல்ஸ், சிக்கன், மட்டன், சப்பாத்தி, பரோட்டா, டீ மற்றும் காபி வரை அனைத்தையும் வழங்குகிறது.

Sathya restaurant

சத்யா உணவகம்

திருநெல்வேலி பேருந்து நிலையத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் முடிவைதனேந்தல், பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள சத்யா உணவகம் லேசான துரித உணவுகளை சாப்பிடுவதற்கு ஏற்ற இடமாகும். இந்த டிரைவ்வே உணவகத்தில் பெரிய டிபார்ட்மெண்ட்டல் ஸ்டாரும் உள்ளது. உங்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்க இது உதவியாக இருக்கும். இங்கே நீங்கள், பானி பூரி, தஹி பூரி, சாட் வகைகள், சான்ட்விச், பர்கர், போன்றவற்றை சுவைத்து மகிழலாம்.

royal coco family restaurant

ராயல் கோகோ ரெஸ்டாரண்ட்

நீங்கள் சைவ உணவுகளை விரும்புகிறீர்கள் என்றால், இந்த உணவகம் பார்க்கத் தகுந்தது. COCO குடும்ப உணவகத்தில் காபி துவங்கி அனைத்து உணவுகளுமே சுவையாக இருக்கும். நல்ல ஊழியர்கள் ஆண்டு முழுவதும் விருந்தினர்களை வரவேற்கிறார்கள். இந்த இடத்தில் சேவை என்பது ரசிக்கத்தக்க ஒன்று. பெரும்பாலான நேரங்களில், அழகான சூழ்நிலையை இங்கு காணலாம்.

Mutram veg restauarant

முற்றம் சைவ உணவகம்

தரமான சைவ உணவுகளை சாப்பிட விரும்பும் நபர்கள் கட்டாயம் இந்த ஹோட்டலுக்கு தான் செல்ல வேண்டும். இந்த ஹோட்டல் திருநெல்வேலி பேருந்து நிலையத்திலிருந்து 51 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கே சுவையான சாம்பார் சாதம் துவங்கி, சைவ சாப்பாடு, டீ, காபி, டிபன் அனைத்துமே கிடைக்கும்.

இரு நகரங்களுக்கமான இடையே உள்ள பயணம் சுமார் 1.5 மணி நேரம் இருக்கும். உங்கள் பயணத்தை அற்புதமாகவும், மறக்கமுடியாததாகவும் மாற்றுவதற்கும் இந்த பதிவு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உணவில் சமரசம் செய்யாமல் இருப்பதற்கும், உங்கள் பயணத்தை சீராகச் செய்யும், நீங்களும் சாப்பிட்டு மகிழ மேற்கூறிய தகவல்கள் உங்களுக்கு போதுமானதாக இருக்கும்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+