Search
  • Follow NativePlanet
Share
» »ராஜ குடும்பத்தினர் மட்டுமே வசிக்கும் விசித்திரக் நகரம்!

ராஜ குடும்பத்தினர் மட்டுமே வசிக்கும் விசித்திரக் நகரம்!

கோட்டைகளும், சின்னங்களும் மட்டுமே அக்கால மன்ர்களை நினைவு கூறிக்கொண்டிருக்கும் சூழலில் இங்கே ஒரு கிராமம் முழுவதும் இராஜ குடும்பத்தினர் மட்டுமே வசிக்கும் விசித்திரமும் உள்ளது.

இந்தியா பல்வேறு வரலாற்று பின்னணிகளைக் கொண்டுள்ளது நாம் அறிந்ததே. இங்குள்ள ஒவ்வொரு பகுதியும் ஒரு திறமைமிக்க மன்னரால் ஆட்சி செய்யப்பட்டது. இருவேறு பகுதிகளுக்கு இடையேயான போர், செல்வம், ஆதிக்கம் என அன்றைய காலகட்டம் வீரமும், போரும் நிறைந்ததானத்தான் இருந்தது. ஆங்கிலேயர் படையெடுப்பின் பின் மன்னர்களின் ஆட்சி கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அப்படி பல மன்னர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் கோட்டைகளும், நினைவுச் சின்னங்களும் மட்டுமே இன்று அவர்களை நினைவு கூறிக்கொண்டு இருக்கிறது. ஆனால், இங்கே ஒரு கிராமம் முழுவதும் இராஜ குடும்பத்தினர் மட்டுமே வசிக்கும் விசித்திரமும் உள்ளது.

ராஜ்கிர்

ராஜ்கிர்


ராஜ்கிர் ஒரு அழகிய பள்ளத்தாக்கில் உள்ளதால் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இந்த பள்ளத்தாக்கின் கூரைகளாக எழில் கொஞ்சும் மலைகள் திகழ்ந்து வருகின்றன. ராஜ்கிர் நகரத்தில் புத்தரை பற்றியும் புத்த மதத்தை பற்றியும் பல்வேறு கதைகள் உள்ளன. இங்குள்ள கோட்டைகளும், நினைவுச் சின்னங்களும் உலகளவில் உள்ள வரலாற்று ஆர்வலர்களை, விரும்பிகளை ஈர்த்து வருகிறது.

juggadery

ராஜ குடும்ப நகரம்

ராஜ குடும்ப நகரம்


ராஜ்கிர் முழுவதுமே ராஜ குடும்பங்களை கொண்டதாக இருப்பது உங்களுக்குத் தெரியுமா ?. பழங்காலத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள மகதா என்ற இடத்தின் தலைநகரமாக விளங்கியது ராஜ்கிர். புராதன காலத்தில் கல்வி மற்றும் கலாச்சாரம் போன்றவை தழைத்தோங்கிய பூமியாக இது இருந்துள்ளது. இப்பகுதியில் இருந்த மகத நாட்டில் தோன்றிய குப்த சாம்ராஜ்ஜியம் கி.மு 240ம் நூற்றாண்டில் இருந்து இந்தியாவின் பொற்கால ஆட்சியாக விளங்கி வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

Photo Dharma

வரலாற்று பின்னணி

வரலாற்று பின்னணி


ராஜ்கீர் புத்தர் மற்றும் மஹாவீரர் ஆகிய இரண்டு ஞானிகளுடனும் தொடர்புடைய பல வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்டுள்ளது. ஜைன மதத்தை தோற்றுவித்த மஹாவீரர் இந்த தலத்தில் பிறந்து முக்தியும் பெற்றதாக வரலாறு உண்டு.

Tonii

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்


ராஜ்கிர் நினைவுச் சின்னங்களால் நிரம்பி வழியும் நகரம். இங்கே சுற்றுலா செல்பவர்கள் அறிவு சார்ந்த அனுபவத்தை பெறலாம். அஜட்ஷத்ரு கோட்டை, வேணு வனா, சோன்பந்தர் குகை, பிம்பிசார் சிறைச்சாலை போன்றவைகள் இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.

juggadery

அஜத்ஷத்ரு கோட்டை

அஜத்ஷத்ரு கோட்டை


மகதாவை ஆட்சி செய்து வந்த அஜத்ஷத்ரு என்னும் மன்னரால் கட்டப்பட்டதே அஜத்ஷத்ரு கோட்டை. பிரம்மாண்ட கலைநயத்துடனும், கட்டக் கலையின் உச்சகட்ட திறமையும் நிறைந்துள்ள இந்தக் கோட்டையை தவறாமல் ஒரு முறையேனும் பயணிகள் சுற்றிப் பார்க்க வேண்டும்.

Photo Dharma

வேணு வனா

வேணு வனா


இயற்கையாக உள்ள காடுகளே அழிக்கப்பட்டு வரும் இச்சூழலில் அன்றைய காலத்திலேயே ஓர் செயற்கைக் காடு உருவாக்கப்பட்டது என்றால் அது வேணு வனா தான். அமைதியை ரசிக்கவும், சற்று ஓய்வெடுக்கவும் உருவாக்கப்பட்ட காப்பிக் காடாக இது உள்ளது. இங்கே புத்தருக்காக பிம்பிசாரா பேரரசர் கட்டிய அழகிய மேடம் ஒன்று உள்ளது. இங்கே தியானத்திலும் ஈடுபடலாம்.

wikimedia

பிம்பிசார் சிறைச்சாலை

பிம்பிசார் சிறைச்சாலை


பிம்பிசார் சிறைச்சாலையிலிருந்து கிரிட்டகுடா மலை மற்றும் ஜப்பானியர்களின் பகோடாவின் எழில்மிகு தோற்றத்தை நீங்கள் கண்டு ரசிக்கலாம். கௌதம புத்தரின் நம்பிக்கை கொண்ட சீடரான பிம்பிசார் அரசரை அவருடைய மகன் அஜட்ஷத்ரு சிறையில் இட முடிவு செய்தார். எந்த இடத்தில் சிறையிட வேண்டும் என்று தன் தந்தையிடம் கேட்ட போது, இங்கிருந்து பார்த்தால் புத்தர் கண்ணில் படுவதால் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தார்.

Biswarup Ganguly

சோன்பந்தர் குகை

சோன்பந்தர் குகை


சோன்பந்தர் குகைக்கு வியக்கவைக்கும் வரலாறு உள்ளது. இங்கே பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளதை அறிய முடிகிறது. இந்த குகை இரண்டாக பிளவுபட்டிருக்கிறது. ஒரு பிளவு பாதுகாப்பு அறையாகவும் மற்றொரு பிளவு பெட்டக அறையாகவும் விளங்குகிறது. இந்த குகை வழியாக பிம்பிசாரா அரசரின் பெட்டகத்திற்கு செல்லும் பாதை இன்னமும் கூட அப்படியே இருப்பதாகவும், அங்கே பல செல்வங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் உள்ளன. இதற்கு உதாரணம் இங்குள்ள குகையில் காணப்படும் கல்வெட்டுக்கள் அனைத்தும் ஏதோ ஒரு புதிர் போலவே உள்ளது.

Oo91

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


ரஜ்கிர்க்கு பேருந்து அல்லது உள்ளர் வாடகைக் கார்கள் அதிகளவில் உள்ளன. ராஜ்கிர்ரிலிருந்து பாட்னா 93 கிலோ மீட்டர் தொலைவிலும், நலந்தா 12 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. கயா ரயில் நிலையமே இதன் அருகில் உள்ள ரயில் நிலையம் ஆகும்.

LRBurdak

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+