Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை to சிக்மகளூர் உற்சாகப் பயணம் – ரூ.6,000 இருந்தால் போதும்!

சென்னை to சிக்மகளூர் உற்சாகப் பயணம் – ரூ.6,000 இருந்தால் போதும்!

சென்னையிலிருந்து ஒரு குளிர் பிரதேசத்திற்கு சின்னதா ஒரு ட்ரிப் போயிட்டு வரணும்னு ஆசையா? அதே நேரத்தில் அந்த இடம் ஒரு புதிய இடமாக இருக்க வேண்டும், கம்மி பட்ஜெட்டிலும் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறதா? அப்படின்னா உங்களுக்கு சரியான சாய்ஸ் கர்நாடகாவில் அமைந்துள்ள சிக்மகளூர் தான்! சென்னையிலிருந்து சிக்மகளூருக்கு எப்படி செல்வது, எங்கே தங்குவது, எந்தெந்த இடங்களைச் சுற்றிப் பார்ப்பது என்று இங்கே பார்ப்போம்!

சென்னை to சிக்மகளூர் எப்படி செல்வது?

சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 600 கிமீ தொலைவில் இருக்கும் சிக்மகளூருக்கு இங்கிருந்து நேரடியாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதனால் பெங்களூரு சென்று அங்கிருந்து சிக்மகளூரை அடைவது தான் சிறந்த வழி. சென்னையிலிருந்து பெங்களூருக்கு தமிழக அரசு பேருந்துகள் மற்றும் தினமும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு செல்ல ரயில் கட்டணம் ரூ.140 இல் இருந்து தொடங்குகிறது.

chikmagalur

பெங்களூரு to சிக்மகளூர்

பெங்களூரில் இருந்து சாலை வழியாக சிக்மகளூர் செல்வது ஒரு இனிமையான பயணமாக இருக்கும். பெங்களூரில் இருந்து சிக்மகளூருக்கு கர்நாடக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூரு to சிக்மகளூர் செல்லும் தனியார் பேருந்து கட்டணம் ரூ.400 இல் இருந்து ஆரம்பிக்கிறது. உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்.

சிக்மகளூரில் மலிவான தங்குமிடங்கள் புக் செய்வது எப்படி

மூணாறு தென்னிந்தியாவின் பிரபலமான ஒரு பிரதான சுற்றுலாத் தலம் என்பதால் ஏகப்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. உங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றார்போல் நீங்கள் உங்கள் தங்குமிடங்களை புக் செய்து கொள்ளலாம். M K arcade hotel, Maharaja Inn Chikmagalur, Robusta Inn, The lotus boutique hotel, Tranquil retreat, DC comforts, Staymaker grass drops homestayபோன்ற பட்ஜெட் பிரண்ட்லி ஹோட்டல்களை புக் செய்யலாம். அல்லது நீங்கள் கம்மி பட்ஜெட்டின் மூணாறில் ரூம் புக்கிங் செய்ய ஹோட்டல் புக்கிங் இணையத்தளங்களை (Hotel booking service providers) கூட பார்வையிடலாம்.

chikmagalur

சிக்மகளூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்

1. முலாயனகிரி - கர்நாடகாவின் மிக உயரமான சிகரம், அமைதியான சூழல் மற்றும் இயற்கையின் அழகுக்காக அறியப்படுகிறது

2. குதுரேமுக் - மலைகள், அழகிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் பசுமையான நிலப்பரப்புகளைக் கொண்டுள்ளது.

3. ஹெப்பே நீர்வீழ்ச்சி - அழகிய கெம்மனகுண்டி மலைகளுக்கு மத்தியில் 168 மீட்டர் உயரமுள்ள ஹெப்பே நீர்வீழ்ச்சி சிக்மகளூரில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாகும்.

4. பாபா பூதன் - இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் பார்சிகள் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புகழ்பெற்ற கோவில் இருப்பதால், இந்த மாய சிகரம் மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

5. ஹிரேகொலாலே ஏரி - கம்பீரமான மலைகள் மற்றும் விரிவான விலங்கினங்களால் சூழப்பட்ட இந்த ஏரி, கோடையில் சிக்மகளூரில் பார்க்க சிறந்த இடங்களில் ஒன்றாகும்.

6. கல்லத்தகிரி நீர்வீழ்ச்சி - உங்கள் வாழ்நாளில் பல நீர்வீழ்ச்சிகளை நீங்கள் பார்த்திருக்கலாம், ஆனால் கல்லத்தகிரி நீர்வீழ்ச்சி போன்ற எதையும் நீங்கள் பார்த்திருக்க முடியாது. இந்த அருவிகளின் திகைப்பூட்டும் அழகு உங்களை மயக்கத்தில் ஆழ்த்தும்.

7. பத்ரா வனவிலங்கு சரணாலயம் - நீங்கள் இயற்கையின் மத்தியில் நேரத்தை செலவிட விரும்பினால், பத்ரா வனவிலங்கு சரணாலயம் கர்நாடகாவின் சிக்மகளூரில் பார்க்க சிறந்த இடங்களில் ஒன்றாகும்.

8. வீர நாராயண கோயில் - பழங்காலக் கட்டிடக்கலையைக் கண்டு வியக்கவும், பழங்கால வம்சங்களின் வளமான கலாச்சார வரலாற்றை உற்றுப் பார்க்கவும் குடும்பம் சிக்மகளூரில் உள்ள இந்த மாயக் கோயில் சிறந்த இடமாகும்.

9. மாணிக்யதாரா நீர்வீழ்ச்சி - இயற்கை அழகுகளில் ஒன்றான மாணிக்யதாரா நீர்வீழ்ச்சி பாபா புதன் கிரி மலைகளுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இப்பகுதியில் ஈர்க்கக்கூடிய மலையேற்ற பாதைகள் மற்றும் அற்புதமான இயற்கை காட்சிகள் உள்ளன

10. Z பாயின்ட் - நீங்கள் இயற்கையின் உண்மையான அழகைக் காண விரும்பினால், செங்குத்தான மலையில் ஏறுவதற்கு நீங்கள் உடல் தகுதியுடன் இருப்பதாக நினைத்தால், Z பாயிண்டின் ஒரு சாகச மலையேற்றத்திற்கு தயாராகுங்கள்.

11. காபி மியூசியம் - தென்னிந்தியாவில் உள்ள காபி தோட்டங்களின் வரலாற்றைப் பற்றிய நுண்ணறிவைப் பெற சிக்மகளூரில் உள்ள காபி அருங்காட்சியகத்திற்குச் செல்லுங்கள்.

12. தேயிலைத் தோட்டங்கள் - சிக்மகளூரின் மெய்சிலிர்க்க வைக்கும் தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்றாலொழிய அதன் உண்மையான சாரத்தை நீங்கள் அனுபவித்ததாகச் சொல்ல முடியாது.

13. மடு குண்டி நீர்வீழ்ச்சி - புகழ்பெற்ற மடு குண்டி நீர்வீழ்ச்சியானது தட்சிண கன்னடா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு வினோதமான மற்றும் இயற்கையான மூலையில் அமைந்துள்ளது.

14. சீதாலயனகிரி - அதன் முடிவில்லா வசீகரம் மற்றும் இயற்கை அழகு, தென்னிந்தியாவின் மிகவும் காதல் தேனிலவு இடங்களில் ஒன்றாகவும், இயற்கை ஆர்வலர்களுக்கு விருந்தாகவும் அமைகிறது.

15. பல்லாலராய துர்கா கோட்டை - இங்கு ட்ரெக்கிங் செல்வது மிகவும் பேமஸ், வசீகரிக்கும் சூழல் மற்றும் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை ஆகியவை நீண்ட மலையேற்றத்திற்கு மதிப்பு அளிக்கும்.

பயணத்திற்கு ஆகும் செலவுகள்

சிக்மகளூரில் உள்ள சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு 2 இல் இருந்து 3 நாட்கள் தாராளமாக எடுக்கும். எடுத்துகாட்டாக நீங்கள் 5 அல்லது 6 பேர் கொண்ட நண்பர்கள் குழுவுடன் சுற்றுலா பிளான் பண்ணுகிறீர்கள் என்றால், கம்மி பட்ஜெட்டில் இந்த சுற்றுலாவை முடிக்க ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை செலவாகும். இந்த பட்ஜெட் ரயில் அல்லது பேருந்தில் பயணம் செய்தால் மட்டுமே,என்ன பயணிகளே, இப்பொழுதே உங்கள் நண்பர்களுடன் ஒரு ட்ரிப் பிளான் போடலாமா?

More News

Read more about: chikmagalur karnataka
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+