Search
  • Follow NativePlanet
Share
» »இனி சென்னை மெட்ரோ ஸ்டேஷன்களுக்கு மின்சார ஆட்டோக்களில் பயணிக்கலாம் – ஒரு கிமீ ரூ.20 மட்டுமே!

இனி சென்னை மெட்ரோ ஸ்டேஷன்களுக்கு மின்சார ஆட்டோக்களில் பயணிக்கலாம் – ஒரு கிமீ ரூ.20 மட்டுமே!

இனி நீங்கள் உங்கள் வீட்டு வாசலில் இருந்தே சென்னை மெட்ரோ ஸ்டேஷன்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சார ஆட்டோக்களில் (E-Auto) பயணிக்கலாம். சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) சென்னை மெட்ரோ ஸ்டேஷன்களில் எலெக்ட்ரிக் ஆட்டோ சேவைகள் துவங்கப்பட்டுள்ளன. கடைசி மைல் இணைப்பை உறுதி செய்யும் முயற்சியாகவும், பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும் CMRL இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கான கட்டணம் குறைந்தபட்சம் ரூ.20 இல் ஆரம்பித்து பயணிகளுக்கு பல சலுகைகளை வழங்குகிறது! இந்த ஆட்டோவை உபயோகிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோமா?

1

மெட்ரோ பயணிகளுக்காக CMRL இன் முயற்சி

மெட்ரோ சேவைகளை பயன்படுத்த விரும்பும் பயணிகள் மெட்ரோ ஸ்டேஷன்களுக்கு வர அவர்களது சொந்த வாகனங்களையோ அல்லது ஆட்டோ, பொது போக்குவரத்தையோ இனி சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பயணிகளுக்கு மேம்பட்ட பயணத்தை வழங்கும் பொருட்டு சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மின்சார ஆட்டோ சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

MAuto Pride துவக்கம்

MAuto Pride (LEGGO) என்ற இ-ஆட்டோ ஃபீடர் சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகம் துவக்கி வைத்துள்ளது. பயணிகளை அவர்களது இருப்பிடத்தில் இருந்து அந்தந்த மெட்ரோ நிலையங்களுக்கும், நிலையங்களில் இருந்து அவர்களின் பணியிடம் மற்றும் கல்லூரிகளுக்கும் இணைக்கும் முயற்சி இதுவாகும்.

மொத்தம் 28 ஸ்டேஷன்களில் மின்சார ஆட்டோ சேவைகள்

மெட்ரோ ஸ்டேஷன்களில் இருந்து 5 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ சேவைகள் கிடைக்கிறது. இதன் தொடக்கமாக ஆலந்தூர், பரங்கி மலை, மதுரவாயல் உட்பட 28 ஸ்டேஷன்களில் இந்த மின்சார ஆட்டோ சேவைகள் துவங்கப்பட்டுவுள்ளன.

2

கட்டணம் எவ்வளவு

1 கிமீ தூரத்திற்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மாதம் முழுக்க பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடி உண்டு. அத்துடன் Gpay, PhonePe, Paytm போன்ற இணைய பரிவர்த்தனைகளும் செய்யும் பயணிகளுக்கு 10 சதவீத தள்ளுபடியும் கிடைக்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆட்டோக்களை Leggo என்ற செயலி மூலமாக நீங்கள் புக் செய்து கொள்ளலாம். அல்லது நேராகவே சென்றும் ஆட்டோ சேவையை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

4

பயணிகளின் நேரம் மிச்சமாகும்

பல மெட்ரோ பயணிகள் மின்சார ஆட்டோ சேவையை அடிக்கடி வலியுறுத்தி வந்த நிலையில் இப்போது இது துவங்கப்பட்டுள்ளது. இது வாகனங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கான எரிபொருள் செலவை மேலும் குறைக்கும் மற்றும் பார்க்கிங் கட்டணம் மற்றும் பீக் ஹவர்ஸில் பார்க்கிங் இடத்தைக் கண்டுபிடிப்பதில் இருந்து மக்களை காப்பாற்றும்.

புதிய வசதியான மின்சார ஆட்டோ சேவையின் காரணமாக, அனைத்து நிலையங்களிலும் பயணிகளின் வருகையை மேலும் அதிகரிப்பதை CMRL நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சேவை உங்களுக்கு எந்த அளவு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

More News

    Read more about: chennai metro chennai
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+