Search
  • Follow NativePlanet
Share
» »ஒட்டக சவாரி, தாஜ்மஹால் செட், குழந்தைகளுக்கான ஏகப்பட்ட விளையாட்டு அம்சங்கள் நிறைந்த மதுரவாயல் எக்ஸ்போ!

ஒட்டக சவாரி, தாஜ்மஹால் செட், குழந்தைகளுக்கான ஏகப்பட்ட விளையாட்டு அம்சங்கள் நிறைந்த மதுரவாயல் எக்ஸ்போ!

உங்கள் வீட்டு குட்டீஸ்களின் கோடை லீவு வந்துவிட்டதே, எங்காவது அழைத்துப் போகச் சொல்லி நச்சரித்துக் கொண்டே இருக்கிறார்களா? கம்மி பட்ஜெட்டில் ஒட்டக சவாரி, தாஜ்மஹால் செட் அப்பில் போட்டோ, விதவிதமான உணவுகள், எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகளுக்கான போட் ரைடு, ட்ராம்போலின், ஸ்னோ வேர்ல்ட், ஹாரர் வேர்ல்ட் போன்ற எக்கச்சக்கமான விளையாட்டுகள் நிறைந்த மதுரவாயலில் நடந்துக் கொண்டிருக்கும் கோடை கொண்டாட்டம் எக்ஸ்போவிற்கு ஒரு விசிட் அடித்துவிட்டு வரலாமே! இந்த சூப்பர் கண்காட்சியின் சிறப்பம்சம் என்ன? எப்போது செல்ல வேண்டும்? என்ட்ரி டிக்கெட் போன்ற விஷயங்கள் கீழே!

coverimage

கோடை கொண்டாட்டம் 2023

AHR எண்டர்பிரைசஸ், BBQ மாஸ்டர் இணைந்து மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் நடத்தி கொண்டிருக்கும் இந்த கோடை கொண்டாட்டம் எக்ஸ்போவிற்கு தினந்தோறும் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து செல்கின்றனர். ஒரே இடத்தில் குழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டுகள், செயல்பாடுகள், வித விதமான உணவுகள், லக்கி டிரா எல்லாம் கிடைத்தால் சூப்பரா தானே இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் இந்த எக்ஸ்போவிலிருந்து கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதி ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறதாம்.

1

மதுரவாயலில் தாஜ்மஹால் செட் அப்

மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் இப்போது கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது. திடலுக்கு நடுவே அமைக்கப்பட்டிருக்கும் தாஜ்மஹால் போன்ற அமைப்பு தான் இதன் முக்கிய அம்சமாகும். பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசல் தாஜ்மஹாலை செட் போட்டு அமைத்து இருக்கிறார்கள். ஷூட்டிங்கிற்கு அமைக்கப்படுவது போல இது அமைக்கப்பட்டு இருக்கிறது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த குட்டி தாஜ்மஹாலுக்குள் நாம் உள்ளே செல்ல முடியாது. ஆனால் வெளியே நின்று இந்த அழகான அமைப்பை சுற்றிப் பார்க்கலாம், போட்டு எடுத்துக்கொள்ளலாம். இந்த தாஜ்மஹால் செட் அப் அமைப்பினால் தான் இது தாஜ்மஹால் எக்ஸ்போ என்றழைக்கப்படுகிறது.

2

இந்த இடத்தின் ஸ்பெஷல் என்ன?

தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்து போட்டோ எடுத்த பின்னர், நீங்கள் இங்கே மீதி இருக்கும் கேளிக்கைகளில் ஈடுபடலாம். முக்கியமாக இதில் ஒட்டக சவாரி உள்ளது. நீங்கள் ஒட்டகத்தை வாடகை எடுத்துக் கொண்டு கூட இந்த இடம் முழுக்க சுற்றிப் பார்க்கலாம். அதோடு கீழ்க்கண்ட செயல்பாடுகளில் நீங்களும் உங்கள் வீட்டு குட்டீஸ்களும் ஈடுபடலாம்.

1. குழந்தைகள் பெரியவர்களுக்கான தனித்தனி போட்டோ பாயிண்ட்டுகள்

2. செல்பி பாயிண்ட்டுகள்

3. 360 டிகிரி கேமரா பாயின்ட்

4. 3 D சுவர்கள்

5. மேஜிக் ஹவுஸ்

6. ஹாரர் ஹவுஸ்

7. ஸ்னோ வேர்ல்ட்

8. ரோபோ வீடு

9. 3 D விஷுவல் ஹவுஸ்

10. போட் ரைடு

11. கப் & சாசர்

12. ஜியன்ட் வீல்

13. வாட்டர் ரோலர்

14. டெக்னோ ஜம்ப்

15. ஆடும் குதிரை

16. டோரா டோரா

17. மேலும் பல பெரியவர்களுக்கான விளையாட்டுகளும் இதில் உள்ளன.

விதவிதமான திண்பண்டங்கள்

மேற்கூறியவை எல்லாம் அங்கே உள்ள செயல்பாடுகள் மட்டும் தான். அதோடு இந்த எக்ஸ்போ முடிந்துவிடவில்லை. டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, பானி பூரி, பார்பிக்யூ சிக்கன், சீஸ் போண்டா, பிரஞ்சு பிரைஸ், பிரைடு சிக்கன், பாப்கார்ன், பஞ்சுமிட்டாய், சவர்மா போன்ற பல தென்னிந்தியா வட இந்திய உணவுகளையும் நீங்கள் ஒரு கை பார்க்கலாம்.

3

நேரம் மற்றும் நுழைவுக்கட்டணம்

எக்ஸ்போ திறந்திருக்கும் நேரம்: மாலை 3 முதல் இரவு 10 மணி வரை வாரத்தின் எல்லா நாட்களிலும் திறந்து இருக்கிறது.

நுழைவுக்கட்டணம்: ரூ. 60 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

*இந்த ரூ. 60 நுழைவுக்கட்டணம் மட்டுமே, நீங்கள் செல்ல விரும்பும் தனி தனி விளையாட்டுகளுக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

4

கோடை கொண்டாட்டத்திற்கு எப்படி செல்வது

மதுரவாயல் பைபாஸ் பாலத்திற்கு அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் இந்த கோடை கொண்டாட்டம் என்றழைக்கப்படும் AHR எக்ஸ்போ நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் சென்னையின் எந்தப் பகுதியில் இருந்தாலும் கோயம்பேடு பேருந்து நிலையம் வரவும், அங்கிருந்து மதுரவாயலுக்கு செல்லும் பேருந்துகளில் சென்றால் எக்ஸ்போவை அடைந்திடலாம். இந்த எக்ஸ்போவிற்கு நீங்கள் உங்கள் குழந்தைகளுடனோ, உங்கள நண்பர்களுடனோ வரலாம். கண்டிப்பா ரொம்பவும் என்ஜாய் பண்ணுவீங்க.

More News

    Read more about: kodai kondattam chennai
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+