Search
  • Follow NativePlanet
Share
» »இந்த கோடையில் ஊட்டிக்கு செல்லுகிற பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ் – அரிய வாய்ப்பை நழுவவிடாதீங்க!

இந்த கோடையில் ஊட்டிக்கு செல்லுகிற பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ் – அரிய வாய்ப்பை நழுவவிடாதீங்க!

கோடை வருகிறது அல்லவா, எல்லோருக்குமே எங்கயாவது ஜில்லுன்னு ஒரு ட்ரிப் போயிட்டு வந்தால் நன்றாக இருக்குமென்ற எண்ணம் இருக்கும். அதுவும் நம் மாநிலத்திலேயே இருக்கின்ற ஊட்டி, கொடைக்கானலுக்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை கோடையில் மிகுதியாக இருக்கும். அதைக் கருத்தில் வைத்துக் கொண்டு IRCTC, ஊட்டிக்கு வருகின்ற பயணிகளின் உற்சாகப்படுத்த சிறப்பு மலை ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் உங்களது ஊட்டி மலை ரயில் பயணத்தை நீங்கள் கன்பார்ம் செய்துக் கொள்ளலாம்!

 Ooty, Nilgris

வசிகரீக்கும் ஊட்டி மலை ரயில் பயணம்

ஊட்டிக்கு செல்லும் உங்களின் பயணம் ஊட்டி மலை ரயிலில் பயணிக்காமல் முழுமையடையாது. ஊட்டியின் முழு அழகையும் கண்டு ரசிக்க இதில் பயணம் செல்வது மிகவும் அவசியம் என்பதை ரயிலில் பயணம் செய்த பின்னர் நீங்களே புரிந்து கொள்வீர்கள். யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட மீட்டர் கேஜ் ரயில் பாதை, நீங்கள் என்றென்றும் விரும்பும் ஒரு மயக்கும் ரயில் பயண அனுபவத்தை வழங்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எதனால் கட்டாயம் நாம் இதில் பயணம் செய்ய வேண்டும்

கடல் மட்டத்தில் இருந்து 330 மீட்டர் உயரத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து 2200 மீட்டர் உயரத்தில் உள்ள ஊட்டிக்கு 46 கிமீ ரயில் பயணமானது நம்மை வேறு உலகிற்கே கொண்டு செல்லும். ஒரு மணி நேரத்தில் சராசரியாக 10.4 கிமீ வேகத்தில் ஓடுவதால், இந்தியாவின் மிக மெதுவான ரயிலாக பொம்மை ரயில் கருதப்படுகிறது. 46 கிமீ தூரத்தை கடக்க 4.5 மணி நேரம் வரை ரயில் பயணம் நீண்டுள்ளது. பொம்மை ரயில் 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் மற்றும் 208 வளைவுகள் வழியாக செல்கிறது.

 Ooty, Nilgris

விற்றுத் தீர்ந்துவிடும் டிக்கெட்டுகள்

இந்திய ரயில்வேயால் பராமரிக்கப்படும் ஊட்டி மலை ரயில் உதகமண்டலம் முதல் மேட்டுப்பாளையம் வரையிலும், உதகமண்டலம் முதல் குன்னூர் வரையிலும் செயல்படுகிறது. அற்புதமான பொம்மை ரயிலில் ஏறுவதற்கான டிக்கெட்டுகளை இந்திய ரயில்வே இணையதளமான www.irctc.co.in மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் அல்லது நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். சீசன் நேரங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், 2-3 மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடுகிறது

ootytoytrain

பயணிகளுக்காக 2023 கோடையில் சிறப்பு மலை ரயில்கள்

அவலாஞ்சி ஏரி, தொட்டபெட்டா சிகரம், மான் பூங்கா, எமரால்டு ஏரி, ஊட்டி தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரி, கலஹட்டி நீர்வீழ்ச்சி, முதுமலை தேசிய பூங்கா, ஊட்டி மலை ரயில், ரோஸ் கார்டன் மற்றும் பல வியூபாயின்ட்டுகள் என ஊட்டியில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. ஆனால் என்ன இருந்தாலும் இவற்றிற்கு எல்லாம் மணிமகுடம் போல இருப்பது இந்த ஊட்டி மலை ரயில் பயணம் தான்! கோடையில் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என்பதாலும், அவர்கள் மலை ரயில் பயணத்தை அனுபவிக்க விரும்பினால் ஏமாறக் கூடாது என்பதற்காகவும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜுன் 25ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

 Ooty, Nilgris

எப்படி புக்கிங் செய்வது?

1. முதலில், நீங்கள் IRCTC போர்ட்டலின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.

2. நீங்கள் நேரடியாக உள்நுழையலாம் அல்லது உங்களிடம் கணக்கு இல்லையென்றால் அதை உருவாக்கலாம்.

3. உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழைய வேண்டும்

4. முகப்புப் பக்கத்தில் ஊட்டி மலை ரயில் என்று தேது, "எனது பயணத்தைத் திட்டமிடு" என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.

5. A) நிலையத்திலிருந்து B) நிலையத்திற்கு C) பயணத் தேதி D) டிக்கெட் வகை (E-ticket) உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

6. தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையில் உள்ள ரயில்களின் பட்டியலை நீங்கள் சரிபார்க்கலாம்.

7. ரயில் பட்டியலில் இருந்து ரயிலைத் தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ரயிலில் உள்ள வகுப்பின் வகையைக் கிளிக் செய்யவும்

8. தேர்ந்தெடுக்கப்பட்ட ரயிலில் கிடைக்கும் வகுப்பின் வகையைக் கிளிக் செய்தால் போதும்.

9. டிக்கெட்டை முன்பதிவு செய்ய, நீங்கள் "புக் நவ்" விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

10. பயணியின் பெயர், வயது, பாலினம் மற்றும் படுக்கை விருப்பம் போன்ற பயணிகளின் விவரங்களை உள்ளிடவும்.

11. கட்டண விருப்பத்திற்குச் சென்று, கட்டண முறையைத் தேர்ந்தெடுத்து, "பணம் செலுத்து" என்பதைக் கிளிக் செய்யவும்

12. டிக்கெட்டுக்கான கட்டணத்தை நீங்கள் வெற்றிகரமாகச் செய்தவுடன், டிக்கெட் உறுதிப்படுத்தல் விவரங்கள் உங்களுக்கு வழங்கப்படும்.

13. ரயிலில் ஏறும் போது ஒரு பிரிண்ட் அவுட் எடுக்கவும் அல்லது டிக்கெட் சேகரிப்பாளரிடம் மொபைலில் காட்டவும்.

பச்சைப் பசேல் என்று இயற்கை எழில்கொஞ்சும் மலைகள், நீரூற்றுகள், சிலு சிலுவென்று முகத்தில் அடிக்கும் பூங்காற்று என ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்து மகிழ ஊட்டி மலை ரயிலில் நம் வாழ்வில் ஒரு முறையேனும் பயணிக்க வேண்டும் மக்களே!

More News

Read more about: ooty nilgris
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+