Search
  • Follow NativePlanet
Share
» » ரூ. 6,000 இல் 3 நாட்கள் திருப்பதி சுற்றுலா – IRCTC அசத்தல் டூர் பேக்கேஜ்!

ரூ. 6,000 இல் 3 நாட்கள் திருப்பதி சுற்றுலா – IRCTC அசத்தல் டூர் பேக்கேஜ்!

திருப்பதி வெங்கடேச பெருமாளை வாழ்வில் எத்தனை முறை தரிசித்தாலும், போதவே போதாது! மூலஸ்தானத்திற்குள் நின்று எம்பெருமானை தரிசிக்கும் போது தான், அந்த 10 நொடிகள் வாழ்வில் எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்று நாம் உணருவது மிகவும் சாதாரணம் தான்! IRCTC திருப்பதி செல்லும் பக்தர்களுக்காக இப்போது ஒரு அசத்தலான டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது! அதனைப் பற்றிய நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் கீழே!

3 பகல் 4 இரவு அடங்கிய சுற்றுலா

3 பகல் 4 இரவு அடங்கிய சுற்றுலா

யாத்ரீகர்களுக்காக IRCTC அறிமுகப்படுத்தியுள்ள இந்த 3 பகல் 4 இரவு அடங்கிய டூர் பேக்கேஜில் காணிபாக்கம், திருச்சானூர், திருமலை, மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய இடங்களை நீங்கள் சுற்றிப் பார்க்கலாம். காணிபாக்கம் வரசித்தி விநாயகர், திருச்சானூர் அலமேல் மங்கை, ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள், ஸ்ரீகாளஹஸ்தி களத்தீஸ்வரர், திருப்பதி வெங்கடேச பெருமாள் உட்பட பல கோவில்களை நீங்கள் தரிசிக்கலாம்.

அனைத்துமே சிறப்பு தரிசனம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பயணிகளின் வசதிக்காக காக்கிநாடா டவுன், ராஜமுந்திரி, பீமாவரம் டவுன், குடிவாடா, விஜயவாடா, தெனாலி ஆகிய இடங்களில் போர்டிங் செய்து கொள்ளலாம்.

இந்த அட்டகாசமான டூர் பேக்கேஜிற்க்கான கட்டணங்கள்

ரயில் மற்றும் பேருந்துகளில் சுற்றி காண்பிக்கப்படும் இந்த டூர் பேக்கேஜின் கட்டணம் எல்லா தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்து இருப்பது சிறப்பாகும். ட்ரிப்பில் ஷேரிங்கில் ரூ.6705, டபுள் ஷேரிங்கில் ரூ.6920, சிங்கிள் ஆக்குபன்சியில் ரூ.8150 ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கு ரூ. 6295 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பேக்கேஜில் ரயிலில் ஸ்லீப்பர் கிளாஸ் பயணம், சுற்றுலா எஸ்கார்ட், உணவு, தங்குமிடம், டிராவல் இன்சூரன்ஸ் ஆகியவை அடங்கும். மேலும் மக்கள் பாரம்பரிய உடைகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்வது எப்படி?

முன்பதிவு செய்வது எப்படி?

IRCTC இன் இந்த மலிவுவிலை திருப்பதி டூர் பேக்கேஜில் இணைந்து குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்று தோன்றுகிறதா? உடனே IRCTC இன் https://www.irctctourism.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை பார்வையிடுங்கள். அல்லது மண்டல அலுவலகங்களில் நேரே சென்று புக் செய்திடுங்கள்!

More News

    Read more about: irctc tirupati tour package
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+