Search
  • Follow NativePlanet
Share
» » வசதி கட்டணம் இல்லாமல் தள்ளுபடியில் விமான டிக்கெட்டுகளை IRCTC புக் செய்வது எப்படி?

வசதி கட்டணம் இல்லாமல் தள்ளுபடியில் விமான டிக்கெட்டுகளை IRCTC புக் செய்வது எப்படி?

IRCTC இல் ரயில் டிக்கெட் புக் செய்து நாம் பயணித்து இருப்போம். ஆனால், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) ரயில் சேவை மட்டுமின்றி ஹோட்டல் புக்கிங், சுற்றுலாத் தலம், விமான டிக்கெட் புக்கிங், உணவு ஆர்டர் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகிறது. IRCTCயின் இணையதளம் மற்றும் IRCTC ஏர் மொபைல் ஆப் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகளை எந்தவித வசதிக் கட்டணமும் இன்றி முன்பதிவு செய்யலாம் என்று உங்களுக்கு தெரியுமா?

பல்வேறு சேவைகளை வழங்கும் IRCTC

மலிவான கட்டணத்தில் விரைவான போக்குவரத்து வழங்கும் இந்திய ரயில்வே பெரும்பாலான இந்திய மக்களின் போக்குவரத்து உயிர்நாடியாக உள்ளது. ரயில் சேவை மட்டுமின்றி, IRCTC இணையத்தளத்தில் நாம் ஹோட்டல் புக்கிங் செய்யலாம், சுற்றுலாத் தலம் தேடலாம், டூர் ஆப்பரேட்டர் புக் செய்யலாம், உணவு ஆர்டர் செய்யலாம், தள்ளுபடியில் விமான டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.

irctcairplane bookings

விமான பயணிகளுக்கான சிறப்பு செய்தி

சமீப காலமாக அதிவேக ரயில்கள், வந்தே பாரத் மற்றும் சிறப்பு ரயில்களை இயக்குவது மூலம் இந்திய ரயில்வே துறையின் அதிகராப்பூர்வ வலைத்தளமான இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) பங்குகள் 3.38 சதவீதம் உயர்ந்துள்ளது. அதன் 24வது வயதில் கால் எடுத்து வைக்கும் IRCTC செப்டம்பர் 27 அன்று விமான பயணிகளுக்கான சிறப்பு செய்தியை அறிவித்தது.

விமான டிக்கெட்டுகளின் விலையில் தள்ளுபடி

IRCTCயின் இணையதளம் மற்றும் IRCTC ஏர் மொபைல் ஆப் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகளை எந்தவித வசதிக் கட்டணமும் இன்றி முன்பதிவு செய்யலாம் என்று அறிவித்துள்ளது. IRCTC இன் விமான டிக்கெட் போர்ட்டல் www.irctc.co.in மற்றும் IRCTC ஏர் மொபைல் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதன் மூலம் இந்தச் சலுகையைப் பெற முடியும்.

ரூ. 2,000 வரை தள்ளுபடி

பூஜ்ஜிய வசதிக் கட்டணங்களுடன், பல்வேறு வங்கிகளின் கார்டு பரிவர்த்தனைகளில் விமான டிக்கெட்டுகளில் ரூ. 2,000 வரை தள்ளுபடியுடன் மற்ற சலுகைகளையும் IRCTC அறிமுகப்படுத்தியுள்ளது. வரையறுக்கப்பட்ட கால சலுகைகளைத் தவிர, IRCTC ஏர் அரசு அதிகாரிகளுக்கான பாதுகாப்புக் கட்டணங்கள் மற்றும் விடுப்பு பயணச் சலுகை (LTC) டிக்கெட்டுகளையும் வழங்குகிறது என்று IRCTC வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆஃபர் சில காலம் மட்டுமே

மேலும், மதிப்பு கூட்டுதலாக, ஐஆர்சிடிசி தனது போர்டல் மூலம் முன்பதிவு செய்யும் ஒவ்வொரு விமான டிக்கெட்டுக்கும் ரூ.50 லட்சம் பயணக் காப்பீட்டையும் வழங்குகிறது. பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால், வரவிருக்கும் விடுமுறைகள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களைத் திட்டமிட வாடிக்கையாளர்களை இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகை வழங்குகிறது சில காலம் மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ள இந்த சலுகையை நீங்களும் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

More News

    Read more about: irctc indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+