Search
  • Follow NativePlanet
Share
» »சென்னைக்கு பக்கத்தில இத்தனை அழகான தீவுகள் இருக்கா – இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

சென்னைக்கு பக்கத்தில இத்தனை அழகான தீவுகள் இருக்கா – இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

சென்னைக்கு அருகில் தீவுகள் இருக்கிறதா? என்று உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் சென்னைக்கு அருகில் ஒன்றல்ல, இரண்டல்ல ஐந்துக்கும் மேற்பட்ட அழகிய தீவுகள் இருக்கின்றன. இவையெல்லாம் சென்னையிலிருந்து குடும்பங்கள் அல்லது நண்பர்களுடன் அழகாக ஒரு நாள் பிக்னிக் சென்று வர ஏற்ற இடங்களாகும். எப்பொழுதும் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கும் இந்த நகர வாழ்க்கையில் இருந்து விடுப்பு எடுத்து இயற்கையோடு ஒன்றிணைய இந்த பயணம் உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

flemingoislands

தடா - பிளமிங்கோ தீவு

நீங்கள் சென்னையிலிருந்து தடா நீர்வீழ்ச்சிக்கு பலமுறை உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சென்று இருக்கலாம். ஆனால், தடாவுக்கு அருகில் இருக்கும் தீவைப் பற்றி நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள். தீவுக்கு படகில் பயணம் செய்து, சுடச்சுட மதிய உணவு சாப்பிட்டுவிட்டு இளைப்பாறலாம். நீங்கள் தடாவில் இருந்து பிளமிங்கோ தீவுக்கு படகு மூலம் அழைத்து செல்லப்படுவீர்கள். நீங்கள் படகில் ஏறிய உடனே உங்களுக்கு வெல்கம் டிரிங்க் வழங்கப்படும். மொத்தமாக தீவை அடைய நீங்கள் 50 நிமிடங்களுக்கு படகில் பயணம் செய்ய வேண்டும். தீவை அடைந்த உடன் உங்களுக்கு சுடச்சுட மீன்குழம்பு, மீன் வறுவல், சிக்கன் பார்பிக்யூ உணவு வகைகள் செய்து தரப்படுகிறது.

ஆலம்பாறை தீவு

18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்ட இந்த ஆலம்பாறை கோட்டை துறைமுகமாக செயல்பட்டது. சென்னையில் இருந்து 70 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த பழங்கால கோட்டை கடற்கரையும் வங்காள விரிகுடாவும் ஒன்று சேரும் இடத்தில் அமைந்து சிறு சிறு தீவுகளை உருவாக்கியுள்ளது. ஒரு நாள் பிக்னிக் ஆக சென்னையில் இருந்து இ.சி.ஆர் சாலையில் புறப்பட்டால் ஒன்றரை மணி நேரத்தில் ஆலம்பாறை கோட்டை இருக்கும் இடைக்கழிநாடை அடைந்து விடலாம். இந்த வரலாற்று நினைவுச்சின்னத்தை சுற்றி பார்த்ததோடு சிறு சிறு தீவுகளிலும் நாம் விளையாடி மகிழலாம்.

quibbleisland1

க்விபிள் தீவு

சென்னையில் உள்ள அடையாறு ஆற்றில் அமைந்துள்ள க்விபிள் தீவு (Quibble island), சால்ட் வாட்டர் லகூன்களில் உருவான நான்கு சிறிய தீவுகளில் மிகப்பெரியது ஆகும். தீவின் நடுவே அமைந்துள்ள பெரிய ஐரோப்பிய கல்லறையாலே தான் இந்த தீவு பேமஸ் ஆனது என்று கூறலாம். பிரெஞ்சு தலைமையிலான இந்தியப் படைகளுக்கும் நவாப் படைகளுக்கும் இடையே நடந்த போருக்குப் பிறகு இந்த கல்லறை இங்கு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. மெரினா கடற்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த தீவை மயிலாப்பூர் மற்றும் அடையார் பகுதிகளில் இருந்து எளிதில் அணுகலாம். இந்த அமைதியான இடத்தில் அமர்ந்து, கரையோரங்களில் மோதும் அலைகளின் இனிமையான ஒலியில் சற்றே இளைப்பாறலாம்.

இருக்கம் தீவு

இந்த தீவு ஆங்கிலத்தில் Hidden island, Irukkam island, Lake island என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இந்த அழகிய தீவு சென்னையில் இருந்து 50 கிமீ தொலைவில் புலிகாட் ஏரியின் நடுவே அமைந்துள்ளது. பல அரிய உயிர்களைக் கொண்டிருக்கும் இந்த புலிகாட் தீவில் நிழலில் ஒரு ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாலே போதும். மனசு லேசாக மாறிவிடும். நகர்ப்புற வாழ்க்கை முறையிலிருந்து ஒரு சின்ன பிரேக் எடுக்க நினைக்கும் பயணிகளிடையே இது ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது. ஒரு புது இடத்திற்கு சென்று நண்பர்கள், குடும்பம் குழந்தைகளுடன் ஒரு நாள் பிக்னிக் செல்ல இது ஒரு அருமையான ஸ்பாட் ஆகும்.

kattupalliisland

காட்டுப்பள்ளி தீவு

காட்டுப்பள்ளி தீவு, சில சமயங்களில் எண்ணூர் தீவு என்றும் குறிப்பிடப்படுகிறது, இது புலிகாட் ஏரியின் தெற்கு சுற்றளவில் உள்ள ஒரு தீவாகும். காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம் தீவில் அமைந்துள்ளது. தீவு புதர்க்காடுகளால் சூழப்பட்டுள்ளது மற்றும் சில கேசுவரினா மற்றும் தென்னந்தோப்புகளைக் கொண்டுள்ளது. இங்கு பல வகையான விலங்குகள் மற்றும் பறவைகள் காணப்படுகின்றன. சென்னையில் இருந்து ஒரு நாள் பிக்னிக் செல்ல இது ஒரு அருமையான ஸ்பாட் ஆகும்.

திமிங்கல தீவு

திமிங்கல தீவு சென்னை அடையாறு ஆற்றங்கரையில் உடைந்த பாலத்திற்கு அருகே அமைந்துள்ளது. இங்கு ஒரு போட்டிங் கிளப்பும் செயல்படுகிறது. ஆற்றில் நீர் மட்டம் நன்றாக இருக்கும் போதெல்லாம், அந்த போட் கிளப்பின் சார்பில் இங்கு போட்டிங் ஏற்பாடு செய்யப்படுகிறது. அடையாறு பாலத்திற்கு அப்பால் உள்ள ஆறு தெளிவாக தெரிவதுடன், சீசன் காலத்தில் பல புலம்பெயர் பறவைகளளையும் நாம் இங்கே காணலாம். இங்கு சென்று வந்தவர்கள் 'இந்த தீவில் படகோட்டி செல்வது, மனதில் உள்ள குழப்பங்களை சரி செய்து ஒரு வித தியான மனநிலையை தருகிறது' என்று சொல்கிறார்கள். நீங்களும் ஏன் செல்லக் கூடாது?

More News

    Read more about: chennai islands
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+