Search
  • Follow NativePlanet
Share
» »குமரகம் - கேரளத்தில் அடிச்சு பொழிக்காம்!!

குமரகம் - கேரளத்தில் அடிச்சு பொழிக்காம்!!

படகு இருக்கு, வீடும் இருக்கு ஆனா படகுல வீடு இருக்குமா? . கேரளாவிலே இருக்கு. கடவுளின் சொந்த தேசம் என அழைக்கப்படும் பசுமை ததும்பும் கேரளா மாநிலத்தின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்று அங்கு கணக்கற்று பாயும் அலைகள் எழாத ஓடைகளில் வலம் வரும் படகு வீடுகள் தான். வாருங்கள் ரசிக்க ருசிக்க அப்படகு வீடுகளில் ஒரு பயணம் போகலாம்.

குமரகம் படகு வீடு சவாரி :

குமரகம் படகு வீடு சவாரி :

கேரளத்தின் அரபிக்கடல் கரையோர மாவட்டங்களில் படகுகள் மிக முக்கியமான போக்குவரத்து சாதனம். அங்குள்ள ஓடைகளில் அலைகள் எழாமல் படகு போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருக்கின்றன.

Photo:Vibin JK

குமரகம் படகு வீடு சவாரி :

குமரகம் படகு வீடு சவாரி :

ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் போன்ற மாவட்டங்களில் சாலைவழியாக நாம் சென்றடையக்கூடிய இடங்களில் ஏறத்தாழ பாதிக்கும் மேற்ப்பட்ட இடங்களுக்கு படகுகளின் மூலமும் செல்லலாம்.

Photo:Travelling Slacker

குமரகம் படகு வீடு சவாரி :

குமரகம் படகு வீடு சவாரி :

கேரளத்தில் சுற்றுலாத்துறை வளர்ச்சிபெற ஆரம்பித்ததில் இருந்து அலைகள் எழாத ஓடைகளில் படகு சவாரி சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. அதன் அடுத்தகட்டமாக படகுகள் படகு வீடுகளாக மாற்றப்பட்டன. கிட்டத்தட்ட ஐந்து நட்சத்திர விடுதியில் இருக்கும் அளவிற்கு வசதிகள் இதனுள்ளும் இருக்கின்றன.

Photo:Simply CVR

குமரகம் படகு வீடு சவாரி :

குமரகம் படகு வீடு சவாரி :

இந்த சொகுசு படகு வீடுகளில் இருந்தபடியே கேரளத்தின் பல ஊர்களுக்கும் சென்று அதன் பேரழகை ரசிக்கலாம். அப்படி படகு வீடுகளில் பயணம் செய்ய வேண்டும் என நீங்கள் விருப்பப்பட்டால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் கோட்டயம் மாவட்டத்தில் வேம்பநாடு ஏரிக்கரையில் அமைந்திருக்கும் குமரகம் என்ற ஊருக்கு தான்.

Photo:Dhruvaraj S

குமரகம் படகு வீடு சவாரி :

குமரகம் படகு வீடு சவாரி :

பசுமை ததும்பும் குமரகத்தில் விதவிதமான பறவைகளும், தாவர வகைகளும், நன்னீர் ஏரியில் சுவையான மீன்களும் உள்ளன. இங்குள்ள குமரகம் பறவைகள் சரணாலயத்திற்கு வருடம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்தும் புலம்பெயர்ந்து பறவைகள் வருகின்றன.

Photo:Travelling Slacker

குமரகம் படகு வீடு சவாரி :

குமரகம் படகு வீடு சவாரி :

குமாரகத்தின் அடையாளமாகவும், பலருக்கு வாழ்வாதாரமாகவும் இருப்பது வேம்பநாடு ஏரி தான். கேரளத்தின் மிகப்பெரிய அலைகள் எலா ஏரியான இந்த ஏரியில் படகு வீடு சவாரி முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக திகழ்கிறது. தேனிலவு கொண்டாட விரும்பும் புதுமணத் தம்பதியினரிடையே இந்த படகு வீடு சவாரி மிகப்பிரபலம்.

Photo:e900

குமரகம் படகு வீடு சவாரி :

குமரகம் படகு வீடு சவாரி :

வேம்பநாடு ஏரியில் கிடைக்கும் சுவையான கரி மீன்களை சுவைத்தபடி இடைஞ்சல்கள் இன்றி தனிமையில் சில பொழுதுகளை களித்திட இந்த படகு வீடுகள் அற்புதமான தேர்வு.

Photo:e900

குமரகம் படகு வீடு சவாரி :

குமரகம் படகு வீடு சவாரி :

குமாரகத்தை எப்படி அடையலாம்:

விமானம்: குமரகத்தில் இருந்து 80 கி.மீ தொலைவில் இருக்கும் கொச்சி சர்வதேச விமான நிலையத்ஹை அடைந்து அங்கிருந்து வாடகை கார் மூலம் குமாரகத்தை அடையலாம்.

ரயில் மற்றும் பேருந்து: 16 கி.மீ தொலைவில் இருக்கும் கோட்டையத்தை அடைந்து அங்கிருந்து குமாரகத்தை எளிதாக அடையலாம்.

Photo:Sarath Kuchi

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X