Search
  • Follow NativePlanet
Share
» » தமிழ்நாட்டுக்கு பக்கத்துல பனிப்பொழிவு கிடைக்கிற ஒரே இடம் இது தான் – குட்டி ட்ரிப் அடிக்க ரெடியா?

தமிழ்நாட்டுக்கு பக்கத்துல பனிப்பொழிவு கிடைக்கிற ஒரே இடம் இது தான் – குட்டி ட்ரிப் அடிக்க ரெடியா?

பனிப்பொழிவு என்றாலே காஷ்மீர், சிம்லா, குலு, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் தென்னிந்தியாவிலும் வருடத்திற்கு ஒரு முறை நம்மால் பனிப்பொழிவை பார்க்க முடியும். அதுவும் சென்னையிலிருந்து 7 மணி நேர பயண தூரத்தில் ஆந்திராவில் அமைந்திருக்கும் அழகிய இடத்தில்! 2702 அடி உயரத்தில் அமைந்துள்ள கண்கவர் மலைவாசஸ்தலமான லம்பாசிங்கி குளிர்காலத்தில் அடிக்கடி பனிப்பொழிவைப் பெறுகிறது. அதிக தூரம் பயணம் செய்யாமல் பனிப்பொழிவை கண்டு ரசிக்க இது ஒரு சூப்பரான ஸ்பாட்! இந்த இடத்திற்கு எப்படி செல்வது? எப்போது சென்றால் பனிப்பொழிவை பார்க்கலாம் என்பது குறித்து கீழே பார்ப்போம்!

lambsangicover

அரக்கு பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் அழகிய கிராமம்

லம்பாசிங்கி, விசாகப்பட்டினத்தின் அரக்கு பள்ளத்தாக்கின் சிந்தப்பள்ளி பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 1025 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு மூடுபனி மலைவாசஸ்தலம் ஆகும். இந்த இடம் கொர்ரா பயலு என்றும் அழைக்கப்படுகிறது, இதன் பொருள், "யாராவது திறந்த வெளியில் இருந்தால் அவர்கள் குச்சியைப் போல உறைந்து போவார்கள்!". ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸுக்குக் கீழே செல்கிறது. அப்படி வெப்பநிலை குறையும் போது காணக்கிடைக்காத அரிய காட்சிகளை எல்லாம் நீங்கள் கண்டு மகிழ்வீர்கள்.

தென்னிந்தியாவின் காஷ்மீர்

வினோதமான பள்ளத்தாக்குகள் மற்றும் குளிர்ச்சியான வெப்பநிலையுடன், லம்பாசிங்கி தென் பிராந்தியத்தில் பனிப்பொழிவைக் காணும் ஒரே இடமாக உள்ளதால் இது தென்னிந்தியாவின் காஷ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும், இந்த சிறிய கிராமம் ஒரு ரம்மியமான வானிலையுடன் காணப்படுகிறது. ஆனால் குளிர்காலம் வந்தவுடன் லம்பாசிங்கியின் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸாகக் குறைந்து பனிப்பொழிவை எதிர்கொள்ளுகிறது.

lambasingi

இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடம்

அழகிய பள்ளத்தாக்குகள், குளிர்ச்சியான வெப்பநிலையுடன் இணைந்த இயற்கை அழகு ஆகியவற்றால் நிரம்பிய லம்பாசிங்கி, ஒரு சரியான சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக நம்மை வரவேற்கிறது. இந்த மலைவாசஸ்தலம் குறைந்த மக்கள்தொகை கொண்டதாக இருந்தாலும், மிளகு மற்றும் காபி தோட்டங்களில் ஈடுபடும் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியின சமூகத்தின் தாயகமாக இது உள்ளது. ஆகையால் தனிமைத் தேடி வருபவர்களுக்கும், ஓய்வெடுக்க வருபவர்களுக்கும் இது எல்லையில்லாத மகிழ்ச்சியை தருகிறது.

அங்கே என்னவெல்லாம் சுற்றிப் பார்க்கலாம்

வெறுமனே பனிப்பொழிவை மட்டுமல்ல லம்பாசிங்கியில் சுற்றிப் பார்ப்பதற்கும் ஏராளமான அழகிய இடங்கள் உள்ளன.

1. லம்பாசிங்கி வியூபாயின்ட்

2. தஜங்கி ரிசர்வாயர்

3. கொத்தப்பள்ளி நீர்வீழ்ச்சி

4. சூசன் கார்டன்

5. ஏரவரம் நீர்வீழ்ச்சி

6. அன்னாவரம்

7. அரக்கு பள்ளத்தாக்கு

8. விசாகப்பட்டினம்

lambasingi

எப்போது செல்ல வேண்டும்

ஆண்டு முழுவதும் இந்த இடம் அழகாக காட்சியளிப்பதால் நீங்கள் எந்த நேரத்திலும் இந்த இடத்திற்கு பிரயாணம் செய்யலாம். ஆனால் நீங்கள் பனிப்பொழிவை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் குளிர் காலத்தில் அதாவது நவம்பர் - ஜனவரி க்குள் செல்ல வேண்டும். அந்த நேரத்தில் நீங்கள் இங்கு பனிப்பொழிவை பார்க்க முடியும்.

எப்படி செல்வது?

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விசாகப்பட்டினத்திற்கு ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து இயக்கப்படுகிறது. அதனால் நீங்கள் விசாகப்பட்டினத்தை முதலில் அடைய வேண்டும். விசாகப்பட்டினத்தில் இருந்து தனியார் டாக்சி அல்லது கேப் மூலமாக 110 கிமீ தூரத்தில் இருக்கும் லம்பாசிங்கியை எளிதில் அடையலாம். அதோடு விசாகப்பட்டினத்தில் இருந்து லம்பாசிங்கிக்கு அரசு பொது பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. நீங்கள் அப்படியும் செல்லலாம். ஆனால் எது எப்படியோ இந்த வருடம் இந்த குட்டி காஷ்மீரில் பனிப்பொழிவை பார்க்க ரெடி ஆகிடுங்க!

More News

    Read more about: lamasingi andhra pradesh
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+