Search
  • Follow NativePlanet
Share
» »அசாமில் இருந்து பூட்டான் வரை நாட்டின் மிகப் பெரிய தேசியப் பூங்கா!

அசாமில் இருந்து பூட்டான் வரை நாட்டின் மிகப் பெரிய தேசியப் பூங்கா!

நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய பூங்காக்கள் இருந்தாலும் அசாமில் தொடங்கி பூட்டான் வரை நீண்டு கிடக்கும் மிகப் பெரிய தேசியப் பூங்கா குறித்து கேள்விப்பட்டிருக்கீங்களா ?

ஒரே இடத்தில் பல அரிய வகை விலங்கினங்களையும் கண்டு ரசிக்க வேண்டும், எளிதில், நம் சுற்றுவட்டாரத்தில் காணக் கிடைக்காத உயிரினங்களை ஒரு முறையாவது புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என பலருக்கும் ஆசை இருக்கும். ஒரு சிலர், விலங்குகள் மீது அளவுகடந்த காதலைக் கொண்டிருப்பர். அவர்கள் பெரும்பாலும் பயணிப்பது பெரிய அளவிலான தேசிய வனவிலங்குகள் பூங்காக்களை நோக்கியே. நம் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய தேசிய வனவிலங்குகள் பூங்காக்கள் இருந்தாலும் இங்கே அசாமில் தொடங்கி பூட்டான் வரை நீண்டு கிடக்கும் ஓர் மிகப் பெரிய தேசியப் பூங்காவை நோக்கித்தான் இன்று பயணிக்கப் போகிறோம்.

மனாஸ் தேசியப் பூங்கா

மனாஸ் தேசியப் பூங்கா


அசாம் மாநிலத்தின் மிகப் பிரபலமான தேசியப் பூங்காக்களின் ஒன்றுதான் மனாஸ் தேசியப் பூங்கா. உலகப் பாரம்பரிய தலமாக யுனெஸ்கோ அமைப்பால் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த பூங்கா புலிகள் சரணாலயமாகவும், பாதுகாக்கப்பட்ட இயற்கை வனப்பகுதி மற்றும் யானைகள் சரணாலயமாகவும் திகழ்கிறது.

Sougata Sinha Roy

அசாம் - பூட்டான்

அசாம் - பூட்டான்


இமய மலையின் அடிவாரத்தில் துவங்கும் இப்பூங்காவின் பரப்பளவு பூட்டான் வரை நீண்டு அங்கு ராயல் மனாஸ் தேசியப் பூங்கா என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. முள்ளடர்ந்த முயல், ஆமைகள், குட்டையான மான் மற்றும் தங்க நிற கரடி என பலவகை விலங்கினங்களுக்காக பெயர்பெற்றுள்ளது.

யானைகள் சரணாலயம்

யானைகள் சரணாலயம்


சுமார் 360 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும் மனாஸ் தேசியப் பூங்காவின் ஒரு பகுதியாக யானைகள் பூங்காவையும் சுற்றிப் பார்க்க முடியும். அதுமட்டுமின்றி யானைகளுடன் ஒன்றான வனப் பகுதியில் பயணங்கள், பசுமைக் காட்டில் நடை பயணங்கள் போன்றவற்றிலும் சுற்றுலாப் பயணிகள் ஈடுபடும் அம்சங்கள் இங்கே உள்ளன.

Adrita Ghosh 94

உக்ரதாரா கோவில்

உக்ரதாரா கோவில்


மனாஸ் தேசியப் பூங்காவிற்கு பயணம் செய்தால் தவறாமல் அருகில் உள்ள சில சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று வரலாம். அவற்றுள் உக்ரதாரா கோவிலும் ஒன்று. உக்ரதாரா கோவில் காளி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இது உஜான் பஜார் பகுதியில் ஜோர் புகுரி எனும் இடத்தின் மேற்குப்புறத்தில் அமைந்துள்ளது. அசாம் மாநிலத்தின் மிக முக்கியமான ஆன்மீக பயண தலங்களில் ஒன்றாக இந்தக் கோவில் பிரசித்தி பெற்றுள்ளது. நகரின் மையப்பகுதியிலே அமைந்திருப்பதால் மிக எளிதாக இந்த கோவிலை அடைய முடியும்.

Dkonwar

தெய்வமற்ற கோவில்

தெய்வமற்ற கோவில்


பார்வதி தேவி அவதார ரூபமான உக்ரதாரா கோவிலாக வீற்றுள்ளார். இதன் கருவறையில் தெய்வச் சிலை ஏதுமின்றி இருப்பது வியப்பு. மாறாக நீர் நிரம்பிய ஒரு குழியை தெய்வ அடையாளமாக பக்தர்கள் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Dkonwar

அசாம் ஸ்டேட் மியூசியம்

அசாம் ஸ்டேட் மியூசியம்


குவஹாத்தி நகரத்தின் மையப்பகுதியில் திக்காலிபுக்குரி குளத்திற்கு தெற்கே அமைந்துள்ளது அசாம் ஸ்டேட் மியூசியம். இந்த அருங்காட்சியகம் பல சுவாரசியமான புராதன அசாமிய நாணய சேகரிப்புகள், பழங்குடி கலைப்பொருட்கள், சிலைகள் மற்றும் பாரம்பரிய நெசவுத்துணி வகைகள் போன்றவற்றை கொண்டுள்ளது. மாநிலத்தின் கலாச்சாரம் பாரம்பரியம் போன்றவற்றை காக்கும் விதத்தில் கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி கண்காட்சிகள் போன்றவை இந்த அருங்காட்சியகத்தில் நடத்தப்படுவத வாழக்கம்.

புபனேஸ்வரி கோவில்

புபனேஸ்வரி கோவில்


புபனேஸ்வரி கோவில் 7 - 9ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதன் கட்டிடக்கலை அம்சங்கள் பெரும்பாலும் காமாக்யா கோவிலை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. காமாக்யா கோவில் தலத்திலிருந்து மலையேறி இந்த புபனேஸ்வரி கோவிலை அடைய முடியும். இந்த மலையேற்றப்பயணத்தின்போது கீழே ஓடும் பிரம்மபுத்திரா நதியின் அழகை முழுமையாக கண்டு ரசிக்கலாம். இதற்காகவே மலையேற்ற விரும்பிகளும் இங்கே அதிகளவில் பயணிக்கின்றனர்.

Akarsh Simha

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+