Search
  • Follow NativePlanet
Share
» »மாலத்தீவுகள் எல்லாம் சும்மா - இந்தியாவின் இந்த தீவுகளுக்கு சுற்றுலாப் போயிட்டு வாங்க!

மாலத்தீவுகள் எல்லாம் சும்மா - இந்தியாவின் இந்த தீவுகளுக்கு சுற்றுலாப் போயிட்டு வாங்க!

வெள்ளை மணல் நிறைந்த கடற்கரைகள், ஏராளமான இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்கள் மற்றும் அமைதியான சுற்றுப்புறங்கள், நீர் விளையாட்டுகள், டைவிங் நடவடிக்கைள் மற்றும் சாகச விளையாட்டுகள் என மாலத்தீவுகளுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு அழகான சுற்றுலாத் தலம் தான் இந்தியாவின் தென்மேற்கு எல்லையை அலங்கரிக்கும் வைரமான லட்சத்தீவு.

lakshdweep

பட்ஜெட் காரணமாக உங்களால் மாலத்தீவுகளுக்கு செல்ல முடியவில்லையா? லட்ச்சதீவுக்கு சென்று வாருங்கள், மாலத்தீவுகளை மறந்து விடுவீர்கள். லட்சத்தீவுகளில் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்களின் பட்டியல் இதோ உங்களுக்காக!

1. மினிகாய் தீவு (Mincoy islands)

இந்தியாவின் மிகச் சிறந்த அழகிய ரகசியங்களில் ஒன்றாகக் கருதப்படும் மினிகாய் தீவு, அரேபியக் கடலின் பரந்த பரப்பிற்கு மத்தியில் அமைந்துள்ளது. பல ஆடம்பர கடற்கரை ஓய்வு விடுதிகள் தனிமை தேடுபவர்களுக்கு ஒருவித அமைதியை வழங்கி பயணிகளை கவர்கிறது.

லட்சத்தீவுகளின் தென்கோடியில் அமைந்துள்ள மினிகாய் தீவுகள் உள்ளூர் மக்களால் மாலிகாவ் என்று அழைக்கப்படுகிறது. இந்த தீவு மாலத்தீவு கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளுக்கு பிரபலமானது. தீவுக்கூட்டத்தின் தென்மேற்குப் பகுதி சுற்றிப் பார்ப்பதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. இந்த இடம் அதன் கடற்கரைகள் மற்றும் 1885 இல் கட்டப்பட்ட ஒரு கலங்கரை விளக்கத்திற்கு பிரபலமானது.

lakshdweep

2. பங்காரம் தீவு (Bangaram islands)

தேனிலவுக்கு ஏற்ற இடமாக கருதப்படும் இந்த தீவில் உள்ள உற்சாகமான நீர் விளையாட்டு நடவடிக்கைகள் தீவை கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக மாற்றுகிறது. சுற்றுலாப்பயணிகளால் பெரும்பாலும் சொர்க்கம் என்றே அழைக்கப்படும் இந்த பங்காரம் தீவில் வெள்ளை மணல் மற்றும் ஆழமற்ற கடற்கரைகளுக்கு பெயர் போனது.

இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வலர்கள் ஆகிய இருவருக்குமான செயல்பாடுகளால் நிரம்பியிருப்பதால், லட்சத்தீவுகளில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாக இந்த தீவு கருதப்படுகிறது.

3. அகட்டி தீவு (Agatti islands)

ஸ்நோர்கெலிங் தொடங்கி கண்ணாடி படகு சவாரி செய்வது வரை அனைத்து வகையான நீர் நடவடிக்கைகளுக்கும் அகத்தி தீவு சிறந்த இடமாகும். விமான நிலையத்திலிருந்து லகூன் கடற்கரையை அடைய 20 நிமிடங்கள் ஆகிறது. அகட்டி தீவுகளுக்குச் செல்லும்போது உள்ளூர் உணவுகள் மற்றும் உலர்ந்த அல்லது புகையூட்டப்படும் டுனா மீனை சுவைப்பது மிகவும் பிரபலம்.

கடற்கரையில் நிலவொளியில் இரவு உணவு, சூரிய குளியல் மற்றும் உங்கள் அன்புக்குரியவரோடு படகு சவாரி செய்ய தவறாதீர்கள். கொச்சி விமான நிலையத்திலிருந்து வாராந்திர விமானங்களை வழங்கும் விமான நிலையம் இருப்பதால், இந்த தீவு பிராந்தியத்தில் மிகவும் அணுகக்கூடிய இடங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

4. கவரட்டி தீவு (Kavaratti island)

இயற்கை எழில் கொஞ்சும் மசூதிகள் தவிர, கவரட்டி தீவு பல சுற்றுலா தலங்களையும் கொண்டுள்ளது. கடல் அருங்காட்சியகம் முதல் உப்புநீக்கும் ஆலை வரை, தீவில் அனைத்தையும் கொண்டுள்ளது. வெள்ளை மணல், தெளிவான நீல நிற நீர், ஒதுங்கிய தடாகங்கள் மற்றும் அழகான சூரிய அஸ்தமனம் ஆகியவை, இந்த தீவை லட்சத்தீகவுளில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாக ஆக்குகிறது.

இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமான கவரட்டி, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. நீர் விளையாட்டுகள் மற்றும் நீச்சல் போன்றவற்றிலும் சுற்றுலாப் பயணிகள் ஈடுபடலாம்.

lakshdweep

5. கத்மட் தீவு (Kadmat islands)

பெரிய லகுன் மற்றும் வளமான கடல்வாழ் உயிரினங்களின் தாயகமான கட்மட் தீவு அதன் அழகிய ஆழமற்ற வெள்ளி கடற்கரைகளுக்கு பெயர் போனது. லட்சத்தீவுகளில் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கத்மட் தீவு, ஒரு பவளப்பாறையில் மேல் அமைந்துள்ளது.

இந்தத் தீவில் நீங்கள் பரந்த அளவிலான நீர் விளையாட்டுகளையும், தனிமையான நேரங்களையும் அனுபவிக்க முடியும். தீவில் அரிதாகவே மக்கள் நடமாட்டம் உள்ளதால் இது மிகவும் அமைதியான இடமாக உள்ளது. கடல்வாழ் உயிரினங்கள் நிறைந்துள்ளதால், இங்கு முதன்மையான வருமானம் மீன்பிடித்தலே. இந்த தீவில் ஸ்நோர்கெலிங் மற்றும் ஆழ்கடல் டைவிங்கிற்கு செல்வது விசேஷமானது.

More News

    Read more about: lakshadweep island
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+