Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் மிக அசுத்தமான சுற்றுலாத் தளம் சபரிமலை? உங்களால் நம்பவே முடியாதே! #சுற்றுலாகேள்விகள் 1

இந்தியாவின் மிக அசுத்தமான சுற்றுலாத் தளம் சபரிமலை? உங்களால் நம்பவே முடியாதே! #சுற்றுலாகேள்விகள் 1

இந்தியாவின் மிக அசுத்தமான சுற்றுலாத் தளம் சபரிமலை? உங்களால் நம்பவே முடியாதே! #சுற்றுலாகேள்விகள் 1

சுற்றுலா செல்வதற்கான முக்கிய காரணமாக நம்மில் நிறைய பேர் நினைப்பது அலுப்பு தீர, மனச் சுமை குறைய என்பதுதான். அதுமட்டுமல்லாமல், மாசு நிறைந்த நகர வாழ்கையில் இருந்து தப்பித்து சுத்தமான காற்றை சுவாசித்து உடலும், மனதும் புத்துணர்ச்சி பெறவேண்டும் என்பதும் தான். ஆனால், சுற்றுலாப் பயணிகளாலேயே அதிக அளவில் மாசுக்கள் சுற்றுலா பிரதேசங்களை ஆக்கிரமித்து, நாளடைவில் மிக மோசமான சுற்றுலாத் தளமாகவும், அசுத்தம் நிறைந்த பகுதியாகவும் மாற்றிவிடுகின்றன. இந்தியாவின் மிக மிக அசுத்தமான சுற்றுலாத் தளங்கள் எவை என்று நம் வாசகர் ஒருவர் கேட்டுள்ளார். அவருக்கும், நம் மற்ற வாசகர்களுக்கும் பதிலளிக்கும் வகையில் இந்த கட்டுரை.

உங்களுக்கு சுற்றுலாத் தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களிடம் கேளுங்கள். தமிழ் நேட்டிவ் பிளானட் இது நம் முகநூல் பக்கம். மேலும் நமது கட்டுரைகளைத் தொடர்ந்து பெற மேலுள்ள பெல் ஐகானை சொடுக்கி, சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்.

நம்மால் நம்பமுடியாத வகையில், இதில் நம் மனதுக்கு நெருக்கமான சென்னையின் ஒரு புகழ்மிக்க இடமும் உள்ளது மிகவும் வருந்ததக்கது. வாருங்கள் இந்தியாவின் மிக மிக அசுத்தமான முதல் மூன்று இடங்களைப் பற்றி பார்க்கலாம்.

காசி எனும் வாரணாசி

காசி எனும் வாரணாசி

உலகத்திலேயே தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்துவரும் பழமையான நகரங்களில் ஒன்றாக சொல்லப்படுவது உத்திர பிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்துக்களின் புனிதஸ்தலமான வாரணாசி எனப்படும் காசி நகரமாகும். கங்கைக்கரையில் அமைந்திருக்கும் இந்த நகரம் இப்போது மிக மிக மாசடைந்த நகரங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

முக்தி நகரம்

முக்தி நகரம்

காசியில் ஒருவர் இயற்கை எய்தினாலோ அல்லது அவரது இறுதிச்சடங்கு இங்கு நிறைவேற்றப்பட்டாலோ அவர் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து சாஸ்வதமாக விடுபட்டு, மோக்ஷத்தை அடைவார் என்று பெரிதும் நம்பப்படுகிறது. அதனால் இது, விடுதலை அளிக்கக்கூடிய இடம் என்ற அர்த்தம் தொனிக்குமாறு ‘முக்தி ஸ்தலா' என்றும் அழைக்கப்படுகிறது.

Bgabel

 சுற்றுலா செழிக்கிறது

சுற்றுலா செழிக்கிறது

குளியல், ஆராதனைகள் மற்றும் பிணம் எரிப்பு இத்யாதிகள் நிகழ்த்தப்பெறும் படித்துறைகளின் பக்கவாட்டுப் பகுதிகளில் செய்யப்படும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள், இந்த சூட்சுமமான நகரின் மிக முக்கிய வசீகரமாகத் திகழ்கிறது. இத்தனை செயல்கள் மாசடைவதற்கு காரணமாக இருந்தாலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

Wikicomman

 சபரிமலையின் பம்பை ஆறு

சபரிமலையின் பம்பை ஆறு

கேரள மாநிலத்தில் இருக்கும் சபரி மலை இந்தியாவிலேயே அதிகம் பேர் வந்துசெல்லும் ஆன்மீக ஸ்தலமாகும். விஷ்ணு மற்றும் சிவ பெருமானின் மகனாக சொல்லப்படும் ஐயப்பன் இக்கோயிலின் மூலவராவார். இக்கோயிலானது ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களும் பின்னர் கார்த்திகை மாதம் முழுக்கவும் திறந்திருக்கிறது.

Adarshjchandran

 அசுத்தமாக மாறிய நதி

அசுத்தமாக மாறிய நதி

இந்த கோயிலுக்கு இருமுடி கட்டி வருபவர்கள் அனைவரும் பம்பா நதியில் நீராடி பின்னர் புது வேட்டி அணிந்தே மலையேற வேண்டும். இதனாலேயே பம்பா மிகவும் அசுத்தம் நிறைந்த இடமாக மாறிவிட்டது.

Adarshjchandran

சுற்றுலா பயணிகள் கூட்டம்

சுற்றுலா பயணிகள் கூட்டம்

சராசரியாக 450 அல்லது 500 லட்சம் யாத்ரீகபக்தர்கள் இம்மலைப்பகுதிக்கு வருடா வருடம் விஜயம் செய்கின்றனர். உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் யாத்ரீகர்களை ஈர்க்கும் ஒரே பிரம்மாண்ட பக்தி திருத்தலமாக இந்த சபரிமலை புகழ் பெற்றுள்ளது. 18 மலைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ஆன்மீக முக்கியத்துவம் மிகுந்த இந்த ஐயப்பன் கோயிலானது ஆன்மிக அம்சங்களுக்கு அப்பாற்பட்டும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒரு ஆலயமாகும். இதனாலேயே என்னதான் அசுத்தங்கள் நிறைந்தாலும், அதை மனதில் கொள்ளாது அய்யப்பனின் அருளுக்காக கோடி பக்தர்கள் வருகிறார்கள்.

Avsnarayan

சென்னையின் காதல் சின்னம்

சென்னையின் காதல் சின்னம்


காதலை பகிர்ந்துகொள்ளவும், மனம் விட்டு பேசவும், தனிமையை கொண்டாடிடவும், நண்பர்களுடன் கூத்தடிக்கவும் என எல்லாவற்றுக்கும் இந்த கடற்கரையைவிட சிறந்த ஓரிடம் சென்னையில் இருக்க முடியாது. அப்படிப்பட்ட இந்த கடற்கரை நமக்கு ஒரு வருத்தத்தையும் தருகிறது. இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கடற்கரை என்ற பெயர் எடுத்த அதே வேளையில் இதுதான் இந்தியாவிலேயே மிகவும் குப்பைகள் சூழ்ந்த ஓரிடமாகவும் உள்ளது. அதாவது, அதிகம் பேர் தொடர்ந்து வரும் இடங்களில் அதிக குப்பைகள் நிறைந்த இடம் என்ற பட்டியலில் இது மிக அசுத்தமானதாக இருக்கிறது.

Dey.sandip

 பிளாஸ்டிக் கழிவுகள்

பிளாஸ்டிக் கழிவுகள்

என்னதான் கடற்கரையை அசுத்தப்படுத்துவது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அடிக்கடி நடந்தாலும் தினமும் கிட்டத்தட்ட டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் இங்கு குவிகின்றன. இதைவிட கொடுமை கடற்கரையோரத்தில் வசிக்கும் பலரும் இயற்கை உபாதைகளை கழிக்கவும் இந்த இடத்தையே பயன்படுத்துகின்றனர். வார இறுதி விடுமுறைகளிலும், தீபாவளி, காணும் பொங்கல் போன்ற விசேஷ நாட்களிலும் மக்கள் இங்கே அதிகமாக கூடுகின்றனர். இந்த மெரீனா கடற்கரையிலேயே வைத்து மிக சுத்தமான இடமாக சொல்லப்படுவது எல்லியட்ஸ் பீச் எனப்படும் பெசன்ட் நகர் பீச் ஆகும்.

 சுற்றுலாவின் சொர்க்கம்?

சுற்றுலாவின் சொர்க்கம்?

மாலை நேரத்தில் இந்த பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்தால் வங்காள விரிகுடாவுக்கு பின்னணியில் சூரியன் மறையும் அற்புதமான காட்சியை கண்டு ரசிக்கலாம். சென்னைக்கு சென்றால் கட்டாயம் நாம் செல்லவேண்டிய இடம் இதுவாகும். சில நேரங்களில் இங்கே அலைகளின் வேகம் அளவுக்கு அதிகமாக இருக்குமென்பதால் கடலில் குளிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

SriniG

மேலும் படியுங்கள்

மேலும் படியுங்கள்

தென்இந்தியாவின் ஸ்பா அப்படின்னு பலரால அழைக்கப்படுற குற்றாலம், நம்ம தமிழ் நாட்டுல திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற செம்மயான ஒரு பகுதி. மேற்கு தொடர்ச்சி மலைகள்ல கடல் மட்டத்துல இருந்து 167 மீட்டர் உயரத்ல இருக்குற இந்த குற்றாலம், நிறைய சுகாதார ஓய்வு விடுதிகள், அமைதியான ரிசார்ட்கள் அப்றமா மிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட நீர்வீழ்ச்சிகளையும் பெற்றிருக்கு.. கூவத்தூர் ரிசார்ட்ட விட கூடுதல் வசதிகள் குதூகலிக்க தயாரா இருக்கு. மேலும் இங்க செம்ம ஜாலியா ரெண்டு நாளை கழிக்க அற்புதமான சுற்றுலாத் திட்டமும் இருக்கு.. வாங்க தொடர்ந்து படிக்கலாம்

கூவத்தூரை விட கூடுதல் ஜாலி! குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா?கூவத்தூரை விட கூடுதல் ஜாலி! குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா?

மேலும் படியுங்கள்

மேலும் படியுங்கள்

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணிக்கு மகா புஷ்கரம் நடைபெற்றது. இன்று கடைசி நாள் இந்த விழாவில் கலந்து கொண்டு தாமிரபரணியில் நீராடினால் கோடி பலன்கள் கிட்டும் என நம்புகின்றனர். வாருங்கள் நாமும் தாமிரபரணிக்கு சென்று வரலாம்.

விருச்சிக ராசிக்குரிய தாமிரபரணி.. இன்று குளித்தால் கிடைக்கும் கோடி பலன்கள்!விருச்சிக ராசிக்குரிய தாமிரபரணி.. இன்று குளித்தால் கிடைக்கும் கோடி பலன்கள்!

மேலும் படியுங்கள்

மேலும் படியுங்கள்

காளி தேவியின் மற்றொரு பெயரான 'சியாமளா' என்ற பெயரில் இருந்து சிம்லா என்ற பெயர் உருவானது. இந்த பெயரை தற்போது மாற்றி மீண்டும் பழைய பெயரையே வைக்க முடிவு செய்துள்ளது பாஜக அரசு. சரி சியாமளா பற்றியும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் பற்றியும் இந்த பதிவில் காண்போம்

அலகாபாத்தைத் தொடர்ந்து சிம்லா பெயரும் மாற்றப்படுகிறது!அலகாபாத்தைத் தொடர்ந்து சிம்லா பெயரும் மாற்றப்படுகிறது!

Read more about: travel travelquestions
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X