Search
  • Follow NativePlanet
Share
» »இந்த ஒரு காரணத்திற்காகவே வருகிற கோடையில் ஊட்டிக்கு போகலாம் போலயே!

இந்த ஒரு காரணத்திற்காகவே வருகிற கோடையில் ஊட்டிக்கு போகலாம் போலயே!

ஊட்டிக்கு செல்லும் உங்களின் பயணம் ஊட்டி மலை ரயிலில் பயணிக்காமல் முழுமையடையாது. ஊட்டியின் முழு அழகையும் கண்டு ரசிக்க இதில் பயணம் செல்வது மிகவும் அவசியம் என்பதை ரயிலில் பயணம் செய்த பின்னர் நீங்களே புரிந்து கொள்வீர்கள். யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட மீட்டர் கேஜ் ரயில் பாதை, நீங்கள் என்றென்றும் விரும்பும் ஒரு மயக்கும் ரயில் பயண அனுபவத்தை வழங்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழக சுற்றுலாத் துறை நம்மை போன்ற சுற்றுலாப் பயணிகளுக்காகவே ஒரு அசத்தலான செய்தியை வெளியிட்டுள்ளது!

கோடை 2024 இல் ஊட்டியில் சிறப்பு பொம்மை ரயில்கள் இயக்கம்

ஊட்டிக்கு செல்லும்போது பொம்மை ரயிலில் பயணம் செய்வது "அவசியம்" சிறப்பான அனுபவங்களில் ஒன்றாகும். நீலகிரியின் பசுமையான நிலப்பரப்பு மற்றும் மூடுபனி மலைகளின் அழகைக் காண நகரத்தின் அமைதியான நிலப்பரப்பைக் கடந்து செல்வதை கற்பனை செய்து பாருங்கள்! எனவே, அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் கோடை பரிசாக, தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் மேட்டுப்பாளையம்-ஊட்டி-குன்னூர் இடையே மார்ச் 29 முதல் ஜூலை 1 வரை சிறப்பு மலை ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.

toytrainservicestartscoonoor1

சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு ஏற்பாடு

கோடைகால அழகை அனுபவிக்க எத்தனை சுற்றுலாப் பயணிகள் இந்த பகுதிக்கு வருகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட ரயில்வே, இந்த காலகட்டத்தில் மலை பொம்மை ரயிலை மீண்டும் கொண்டு வர முடிவு செய்தது. தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''கோடை காலத்தில், யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற மலை ரயிலில் பயணம் செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர். 206 பாலங்கள் மற்றும் 16 குகைகள் மீது மலை ரயிலில் பயணம் செய்வது, இயற்கைக்காட்சிகளை ரசித்துக் கொண்டே பயணம் செய்வது ஒரு உற்சாகமான அனுபவம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மார்ச் 29 முதல் ஜூலை 1 பொம்மை ரயில் இயக்கம்

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு மலை ரயில் சேவையை தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு மலை ரயில்கள் மேட்டுப்பாளையம்-ஊட்டி-குன்னூர் இடையே மீண்டும் இயக்கப்பட உள்ளன. ரயில்வேயின் அறிவிப்பின்படி, இந்த பொம்மை ரயில்கள் மார்ச் 29 முதல் ஜூலை 1 வரை இயக்கப்படும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையேயும் பொம்மை ரயில் இயக்கப்படும்.

எதனால் கட்டாயம் நாம் இதில் பயணம் செய்ய வேண்டும்

கடல் மட்டத்தில் இருந்து 330 மீட்டர் உயரத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து 2200 மீட்டர் உயரத்தில் உள்ள ஊட்டிக்கு 46 கிமீ ரயில் பயணமானது நம்மை வேறு உலகிற்கே கொண்டு செல்லும். ஒரு மணி நேரத்தில் சராசரியாக 10.4 கிமீ வேகத்தில் ஓடுவதால், இந்தியாவின் மிக மெதுவான ரயிலாக பொம்மை ரயில் கருதப்படுகிறது. 46 கிமீ தூரத்தை கடக்க 4.5 மணி நேரம் வரை ரயில் பயணம் நீண்டுள்ளது. பொம்மை ரயில் 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் மற்றும் 208 வளைவுகள் வழியாக செல்கிறது. இந்த ரயிலில் பயணம் செய்வது நிச்சயம் நம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை வழங்குகிறது.

toytrainservicestartsinooty1

எப்படி டிக்கெட் புக்கிங் செய்வது?

1. முதலில், நீங்கள் IRCTC போர்ட்டலின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.

2. நீங்கள் நேரடியாக உள்நுழையலாம் அல்லது உங்களிடம் கணக்கு இல்லையென்றால் அதை உருவாக்கலாம்.

3. உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழைய வேண்டும்

4. முகப்புப் பக்கத்தில் ஊட்டி மலை ரயில் என்று தேது, "எனது பயணத்தைத் திட்டமிடு" என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.

5. A) நிலையத்திலிருந்து B) நிலையத்திற்கு C) பயணத் தேதி D) டிக்கெட் வகை (E-ticket) உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

6. தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையில் உள்ள ரயில்களின் பட்டியலை நீங்கள் சரிபார்க்கலாம்.

7. ரயில் பட்டியலில் இருந்து ரயிலைத் தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ரயிலில் உள்ள வகுப்பின் வகையைக் கிளிக் செய்யவும்

8. தேர்ந்தெடுக்கப்பட்ட ரயிலில் கிடைக்கும் வகுப்பின் வகையைக் கிளிக் செய்தால் போதும்.

9. டிக்கெட்டை முன்பதிவு செய்ய, நீங்கள் "புக் நவ்" விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

10. பயணியின் பெயர், வயது, பாலினம் மற்றும் படுக்கை விருப்பம் போன்ற பயணிகளின் விவரங்களை உள்ளிடவும்.

11. கட்டண விருப்பத்திற்குச் சென்று, கட்டண முறையைத் தேர்ந்தெடுத்து, "பணம் செலுத்து" என்பதைக் கிளிக் செய்யவும்

12. டிக்கெட்டுக்கான கட்டணத்தை நீங்கள் வெற்றிகரமாகச் செய்தவுடன், டிக்கெட் உறுதிப்படுத்தல் விவரங்கள் உங்களுக்கு வழங்கப்படும்.

13. ரயிலில் ஏறும் போது ஒரு பிரிண்ட் அவுட் எடுக்கவும் அல்லது டிக்கெட் சேகரிப்பாளரிடம் மொபைலில் காட்டவும்.

பச்சைப் பசேல் என்று இயற்கை எழில்கொஞ்சும் மலைகள், நீரூற்றுகள், சிலு சிலுவென்று முகத்தில் அடிக்கும் பூங்காற்று என ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்து மகிழ ஊட்டி மலை ரயிலில் நம் வாழ்வில் ஒரு முறையேனும் பயணிக்க வேண்டும் மக்களே!

More News

    Read more about: ooty toy rain service
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+