Search
  • Follow NativePlanet
Share
» » கோடை சுற்றுலா 2023: சென்னை to கொடைக்கானல் – பயணம், சுற்றிப் பார்க்கும் இடங்கள், செலவுகள்!

கோடை சுற்றுலா 2023: சென்னை to கொடைக்கானல் – பயணம், சுற்றிப் பார்க்கும் இடங்கள், செலவுகள்!

நாம் ஏற்கனவே கோடை 2023 என்ற தலைப்பின் கீழ் சென்னையிலிருந்து ஊட்டிக்கு கம்மி பட்ஜெட்டில் சுற்றுலா செல்வது பற்றி பார்த்தோம் அல்லவா! இப்போது இந்த கட்டுரையில் சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு குறைவான பட்ஜெட்டில் சுற்றுலா எப்படி செல்லுவது என்று பார்ப்போம். சரியாக திட்டமிட்டால் இந்த கோடையை கொடைக்கானலில் அசத்தலாக அனுபவிக்கலாம். சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு பஸ் மற்றும் ரயில் பயணம், கொடைக்கானலில் தங்குமிடங்கள், எந்தெந்த இடங்களைச் சுற்றி பார்ப்பது குறித்து இங்கே காண்போம்!

kodaikanallikefalls

சென்னை to கொடைக்கானல் பேருந்து பயணம்

சென்னையிலிருந்து கொடைக்கானல் 530 கிமீ தொலைவில் அமைந்துள்ளது, பேருந்தில் சென்றால் கிட்டத்தட்ட 9 முதல் 10 மணி நேரம் வரை ஆகும். சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு தமிழக போக்குவரத்து கழகத்தின் சாதாரண பேருந்துகளும் குளிர் சாதன பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அல்ட்ரா டீலக்ஸ் பஸ் டிக்கெட்டின் விலை ரூ.535 ஆகும். உங்களுக்கு இது வேண்டாம், இன்னும் சற்று கூடுதல் வசதியாக செல்ல வேண்டும் என்று தோன்றினால் தனியார் பேருந்துகளை புக் செய்து கொள்ளலாம். அதன் விலை ரூ.900 முதல் ரூ.1400 வரை இருக்கிறது.

kodaikanl1

சென்னை to கொடைக்கானல் ரயில் பயணம்

நீங்கள் வயதானவர்களுடன் சென்றால், குழந்தைகளை அழைத்துச் சென்றால், இன்னும் செலவை குறைக்க நினைத்தால் ரயிலில் செல்வது தான் பெஸ்ட் ஐடியா. ஆம் நீங்கள் Ms Tn Link Exp ரயிலின் ஸ்லீப்பரில் பயணம் செய்தால் கொடைக்கானல் டிக்கெட் விலை ரூ.155 தான் ஆகும். இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட 7 மணி நேரத்தில் கொடைக்கானலை அடைந்து விடும். அல்லது நீங்கள் Bkn Mdu Sf Exp, Mas Ncj Sf Exp, Pandiyan Exp, Chennai Egmore - Tiruchendur Exp போன்ற ரயில்களிலும் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்.

kodaikanl

கொடைக்கானலில் தங்குமிடங்கள் புக் செய்வது எப்படி

கொடைக்கானல் ஒரு பிரதான சுற்றுலாத் தலம் என்பதால் ஏகப்பட்ட ஹோட்டல்களும், ஹோம் ஸ்டேகளும் உள்ளன. உங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றார்போல் நீங்கள் உங்கள் தங்குமிடங்களை புக் செய்து கொள்ளலாம். Kodai breeze, B2B home stay, Le grace kodaikanal, Brickhouse villa, Aaram holidays போன்ற பட்ஜெட் பிரண்ட்லி ஹோட்டல்களை புக் செய்யலாம். அல்லது நீங்கள் கம்மி பட்ஜெட்டின் கொடைக்கானலில் ரூம் புக்கிங் செய்ய ஹோட்டல் புக்கிங் இணையத்தளங்களை (Hotel booking service providers) கூட பார்வையிடலாம்.

kodaikanal

கொடைக்கானலில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்

வசீகரம் நிறைந்த கொடைக்கானல் 'மலைகளின் இளவரசி' என்ற பெயருக்கு ஏற்றார்போல் நம் மனதையும் கண்களையும் கவரும் பல அழகிய சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது.

1) கொடைக்கானல் ஏரி - 60 ஏக்கர் பரப்பளவில், நட்சத்திர வடிவிலான மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரியில் படகு சவாரி செய்து மகிழுங்கள். அது மட்டுமின்றி குதிரை சவாரி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவற்றிலும் நீங்கள் ஈடுபடலாம்.

2) கெனோபி ஹில்ஸ் - கொடைக்கானலில் உள்ள அழகிய இடமாக சாகச ஆர்வலர்களுக்கு ஒரு ஹாட்ஸ்பாட்டாக இருக்கும் கெனோபி ஹில்ஸில் நீங்கள் ட்ரெக்கிங் செய்வது, கேம்பிங் செய்வது மிகவும் அலாதியாக இருக்கும்.

3) டால்பின் நோஸ் - டால்பினின் நோஸ் போன்ற வடிவிலான ஒரு தட்டையான, நீண்டுகொண்டிருக்கும் பாறையின் மீது நின்று கொடைக்கானல் முழு இயற்கை அழகையும் கண்டு ரசிக்கலாம்.

4) பியர் ஷோலா நீர்வீழ்ச்சி - கொடைக்கானல் ஏரியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அழகிய நீர்வீழ்ச்சியில் நீங்கள் ஆனந்தமாக குளிக்கலாம்.

5) கோக்கர்ஸ் வாக் - மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த அழகிய நடைப்பயிற்சி பிளாசா சாயங்கால வேளையில் நடைபயணம் மேற்கொள்ளுங்கள்.

6) தலையார் நீர்வீழ்ச்சி - 297மீ உயரம் கொண்ட இது தமிழ்நாட்டின் மிக உயரமான அருவியாகும். டம் டம் பாறை வியூபாயின்ட்டில் இருந்து நீங்கள் அருவியின் அழகை ரசிக்கலாம்.

7) மன்னவனூர் - கொடைக்கானலில் இருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த அழகிய விவசாய கிராமத்தில் நீங்கள் பண்ணை விவசாயம், அழகிய விலங்கினங்கள், சமவெளிகள், ஏரிகள் ஆகியவற்றைக் காணலாம்.

8) பில்லர் ராக்ஸ் - 400 அடி உயரத்தில் இருக்கும் கற்பாறைகள், அதன் மேலே உள்ள மினி கார்டன் உங்களை மெய் சிலிர்க்க வைக்கும்.

9) டெவில்ஸ் கிச்சன் - பாறைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள குகைகள் மற்றும் மரங்களால் நிரம்பியிருக்கும் இந்த இடம் போட்டோ எடுப்பதற்கு ஏற்றது.

10) பிரையண்ட் பார்க் - கொடைக்கானலில் உள்ள மிகவும் பிரபலமான தாவரவியல் பூங்காக்களில் ஒன்றான பிரையண்ட் பூங்கா அதன் விலங்கினங்கள், ராஃப்ட்ஸ் மற்றும் கலப்பினங்களுக்கு பெயர் பெற்றது. இந்த இடம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

11) சில்வர் கேஸ்கேட் நீர்வீழ்ச்சி - கொடைக்கானல் நகரத்திலிருந்து வெறும் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த அழகிய நீர்வீழ்ச்சி அதன் வெள்ளி நீர் ஓட்டத்திற்கு பெயர் பெற்றது.

12) செண்பகனூர் மியூசியம் - கொடைக்கானல் ஏரியில் இருந்து 5.6 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் நாட்டின் சிறந்த ஆர்க்கிடோரியங்களில் ஒன்று மக்களே.

13) பைன் காடுகள் - கொடைக்கானலின் தென்மேற்கில் அமைந்துள்ள பைன் காடு, நகரின் மிகவும் பிரபலமான மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த சுற்றுலாத் தலமாகும்.

14) பாம்பார் நீர்வீழ்ச்சி - கிராண்ட் கேஸ்கேட் என்றும் அழைக்கப்படும் பாம்பார் நீர்வீழ்ச்சி மிகவும் அழகிய ஒரு சுற்றுலாத் தலம், கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய இடமாகும்.

15) குணா குகை - 1991 இல் கமல்ஹாசன் நடித்த "குணா" திரைப்படம் மூலம் பிரபலமான இந்த குணா குகையை பார்க்காமல் கொடைக்கானல் விசிட் முழுமையடையாது.

மேற்கூறியவை மட்டுமின்றி சூசைட் பாயின்ட், வட்டக்காணல், பெரிஜாம் ஏரி, சைலன்ட் வேலி வியூபாயின்ட், கொடைக்கானல் அப்சர்வேட்டரி, பல்வேறு வியூபாயின்ட்டுகள், கோவில்கள் மற்றும் தேவாலயங்கள் ஆகியவற்றையும் நீங்கள் பார்வையிட வேண்டும். முக்கியமாக கொடைக்கானலில் ஷாப்பிங் செய்ய மறக்காதீர்கள் பயணிகளே!

kodaikanl

பயணத்திற்கு ஆகும் செலவுகள்

கொடைக்கானலில் உள்ள இந்த இடங்களை சுற்றிப் பார்ப்பதற்கு 3 இல் இருந்து 4 நாட்கள் தாராளமாக எடுக்கும். கோடை விடுமுறை வருவதற்கு நேரம் இன்னும் இருப்பதால் அழகாக யோசித்து பஸ் அல்லது ரயில் டிக்கெட், ரூம் புக்கிங், ட்ராவல் கைடு ஆகியவற்றை புக் செய்து கொள்ளலாம். எடுத்துகாட்டாக நீங்கள் உங்கள் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சுற்றுலா பிளான் பண்ணுகிறீர்கள் என்றால், கம்மி பட்ஜெட்டில் இந்த சுற்றுலாவை முடிக்க ரூ. 18,000 முதல் ரூ. 22,000 வரை செலவாகும்.

More News

    Read more about: chennai to kodaikkanal
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+