Search
  • Follow NativePlanet
Share
» »கோடை சுற்றுலா 2023: சென்னை to ஊட்டி – பயணம், சுற்றிப் பார்க்கும் இடங்கள், செலவுகள்!

கோடை சுற்றுலா 2023: சென்னை to ஊட்டி – பயணம், சுற்றிப் பார்க்கும் இடங்கள், செலவுகள்!

2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறை வர இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளது. இப்பொழுதே சரியாக பிளான் பண்ணினால் பட்ஜெட்டில் சுற்றுலாவை சூப்பரா முடிக்கலாம். அதற்காக தினமும் ஒரு சூப்பரான ஸ்பாட்டை நாம் இனி இந்த கோடை 2023 என்ற தலைப்பின் கீழ் பார்க்கலாம். தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் உள்ளன, ஆதலால் முதலில் தாமிழ்நாட்டில் இருந்தே போகலாம். இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போவது அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான மலைகளின் ராணியான ஊட்டியைப் பற்றி தான்! சென்னையிலிருந்து ஊட்டிக்கு எப்படி செல்வது, ஊட்டியில் என்னென்ன இடங்களைச் சுற்றிப் பார்ப்பது என்பது குறித்து இங்கே காண்போம்!

சென்னை to ஊட்டி பஸ் அல்லது ரயில் பயணம்

சென்னை to ஊட்டி பஸ் அல்லது ரயில் பயணம்

சென்னையிலிருந்து ஊட்டிக்கும் கோயம்பத்தூருக்கும் தினந்தோறும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளிலேயே சொகுசு பேருந்துகளும், குளிர் சாதன பேருந்துகளும் உள்ளன. டிக்கெட் விலை ரூ. 575 இல் இருந்து ஆரம்பிக்கிறது. இது வேண்டாமென்றால் நீங்கள் தனியார் சொகுசு பேருந்துகளையும் கூட புக் செய்து கொள்ளலாம். சென்னை சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும், கோயம்பத்தூருக்கும் தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனுடைய கட்டணம் ரூ. 325 இல் இருந்து தொடங்குகிறது. போகும்போதே திரும்பி வருவதற்கான டிக்கெட்டும் புக் செய்து விடுவது நல்லது.

ஊட்டியில் தங்குமிடங்கள்

ஊட்டியில் தங்குமிடங்கள்

ஊட்டியில் பல்வேறு விலைகளில் உங்கள் வசதிக்கேற்ப பலதரப்பட்ட ஹோட்டல்கள் கிடைக்கின்றன. எங்களுக்கு ஹோட்டல் எல்லாம் வேண்டாம், வீடு மாதிரி தான் வேண்டும் என்றாலும் அதற்கான வசதியும் ஊட்டியில் உண்டு. ஹோம்ஸ்டே எனப்படும் வீடுகளில் நீங்கள் தங்கிக் கொள்ளலாம். அவற்றை நீங்கள் booking.com, makemytrip, goibibo, tripadviser என்ற ஹோட்டல் புக்கிங் இணையத்தளங்கள் வாயிலாக புக் செய்து கொள்ளலாம்.

ஊட்டியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்

ஊட்டியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்

தேயிலை தோட்டங்கள், அமைதியான நீர்வீழ்ச்சிகள், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் மற்றும் வசீகரமான காலனித்துவ கட்டிடக்கலை ஆகியவற்றால் நிறைந்திருக்கும் ஊட்டி அனைவருக்கும் சரியான கோடை ஓய்வை தரக்கூடியது. ஊட்டியில் நீங்கள் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களின் லிஸ்ட் இதோ!

1) ஊட்டி ஏரி: இயற்கை எழில் கொஞ்சும் வகையில் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அற்புதமான ஏரியில் படகு சவாரி செய்ய மறக்காதீர்கள்

2) தாவரவியல் பூங்கா: புதிய தோட்டம், இத்தாலிய தோட்டம், கன்சர்வேட்டரி, நீரூற்று மொட்டை மாடி மற்றும் நர்சரிகள் என பல அதிசயங்களையும் கண்டு களிக்க தாவரவியல் பூங்காவிற்கு செல்ல மறக்காதீர்கள்.

3) எமரால்டு ஏரி: பச்சை மலைகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு நடுவில் அமைந்துள்ள இந்த அழகிய ஏரியில் நீங்கள் எங்கும் காண முடியாத நீல நீரைக் காணலாம்.

4) ரோஸ் கார்டன்: 3600 க்கும் மேற்பட்ட ரோஜா வகைகளை ஒரே இடத்தில் காண ஊட்டி ரோஸ் கார்டனை சுற்றிப் பார்ப்பது அவசியம். ரோஸ் கார்டனுக்கு செல்லாமல் ஊட்டி பயணம் முழுமையடையாது.

5) தொட்டபெட்டா சிகரம்: நீலகிரியின் மிக உயரமான சிகரமான தொட்டபெட்டா சிகரத்தின் மீது நின்று ஊட்டியின் முழு அழகையும் நீங்கள் கண்டு களிக்கலாம்.

6) தேயிலை அருங்காட்சியகம்: 1 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தேயிலை அருங்காட்சியகம் ஊட்டி சுற்றுலாத் தலங்களில் தவறவிடக்கூடாத ஒன்றாகும். இங்கு நீங்கள் தேநீர் தயாரிக்கும் செயல்முறையை பார்த்து ரசிப்பதோடு, பலவகையான தேயிலை இலைகளையும் வாங்கி மகிழலாம்.

7) மான் பூங்கா: மான்களைத் தவிர, பல்வேறு பறவைகளுடன் சாம்பார் மற்றும் சிட்டல் உள்ளிட்ட பல விலங்குகளையும் நீங்கள் காணலாம்.

8) கல்ஹட்டி நீர்வீழ்ச்சி: ஊட்டி செல்லும் அனைத்து சாகச ஆர்வலர்களும் ஊட்டியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அழகிய நீர்வீழ்ச்சியை காணாமல் திரும்ப மாட்டார்கள்.

9) முதுமலை தேசியப் பூங்கா: தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள இந்த தேசியப் பூங்காவில் புலி, யானை, கரடி மற்றும் பல அரிய வகை தாவரங்களையும் கண்டு மகிழலாம். அதோடு இங்கு ஜங்கிள் சஃபாரி செய்வது, ட்ரெக்கிங் செய்வது, கேம்பிங் செய்வது மிகவும் பேமஸ்.

10) நீடில் வியூ ஹில் பாயிண்ட்: இயற்கையின் மடியில் சில தரமான நேரத்தை செலவிட விரும்பினால் ஊட்டியில் பார்க்க மிகவும் விரும்பப்படும் இந்த இடத்திற்கு நீங்கள் செல்வது அவசியம்.

11) கேத்தரின் நீர்வீழ்ச்சி: மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அரவேனுவில் பிரிந்து செல்லும் இரட்டை நீர்வீழ்ச்சியான இது இயற்கை அழகு, உயரம் மற்றும் பிராமாண்டம் காரணமாக ஊட்டி சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.

12) திபெத்திய சந்தை: ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களைப் போலவே, திபெத்திய சந்தையும் அதன் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. கம்பளி ஆடைகள், மணிகள் நெக்லஸ்கள் மற்றும் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட பொருட்களை இங்கே நீங்கள் வாங்கி மகிழலாம்.

13) அரசு அருங்காட்சியகம்: ஊட்டியின் வரலாறு, பழங்குடியினரின் நாட்டுப்புறக் கதைகள் - கலை, கைவினை மற்றும் சிற்பங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கான சரியான அனுபவத்தை உங்களுக்கு இந்த அரசு அருங்காட்சியகம் வழங்குகிறது.

14) காமராஜ் சாகர் அணை: பச்சை பசேல் என்றிருக்கும் மலைகள் மற்றும் பசுமையான நிலப்பரப்புகளின் மயக்கும் காட்சிகளை ரசிக்க காமராஜ் சாகர் அணையை பார்வையிடுவது அவசியம்.

15) லாஸ் ஃபால்ஸ்: நீச்சலுடன் இணைந்த ஒரு வருகை ஒரு புத்துணர்ச்சியூட்டும் குளியலைப் போட ஊட்டி சுற்றுலாப் பயணிகள், பிரமிக்க வைக்கும் லாஸ் ஃபால்ஸுக்கு வருகை தருகின்றனர்.

மேற்கூறியவை மட்டுமின்றி, எல்க் நீர்வீழ்ச்சி, பெலிக்கள் ஏரி, பைன் காடுகள், சிம்ஸ் பூங்கா, பார்சன்ஸ் பள்ளத்தாக்கு, கண்டல் க்ராஸ் சர்ச், பைசன் பள்ளத்தாக்கு, ட்ருக் கோட்டை, த்ரட் கார்டன், டைகர் ஹில்ஸ், ஊட்டி காபி ஹவுஸ், ட்ரைபல் ரிசர்ச் சென்டர், கார் மியூசியம் மற்றும் அவலாஞ்சி ஏரி ஆகியவையும் நீங்கள் கட்டாயம் ஊட்டியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

பயணத்திற்கு ஆகும் செலவுகள்

பயணத்திற்கு ஆகும் செலவுகள்

ஊட்டியில் உள்ள இந்த இடங்களை சுற்றிப் பார்ப்பதற்கு 3 இல் இருந்து 4 நாட்கள் தாராளமாக எடுக்கும். கோடை விடுமுறை வருவதற்கு நேரம் இன்னும் இருப்பதால் அழகாக யோசித்து பஸ் அல்லது ரயில் டிக்கெட், ரூம் புக்கிங், ட்ராவல் கைடு ஆகியவற்றை புக் செய்து கொள்ளலாம். எடுத்துகாட்டாக நீங்கள் உங்கள் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சுற்றுலா பிளான் பண்ணுகிறீர்கள் என்றால், கம்மி பட்ஜெட்டில் இந்த சுற்றுலாவை முடிக்க ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரை செலவாகும்.

More News

    Read more about: ooty tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+