• Follow NativePlanet
Share
» »ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய அழகான இடங்கள் இவைகள் தான் – மிஸ் பண்ணிடாதீங்க!

ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய அழகான இடங்கள் இவைகள் தான் – மிஸ் பண்ணிடாதீங்க!

ஜூன் மாதம் பிறந்தும் கூட வெயிலின் தாக்கம் குறையவில்லை, இன்னும் சொல்லப்போனால் முன்பை விட இப்போது தான் வெயில் மிகவும் அதிகமாக இருப்பதை நாம் உணர்கிறோம். அதனாலையே பள்ளிக்கு செல்லும் நம் குழந்தைகளுக்கும் கூட பள்ளி திறக்கும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் அதற்காக வீட்டிற்கு உள்ளேயே அடைந்து கிடக்க வேண்டாம். ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் உள்ளன. தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டால் அந்த இடங்களுக்கு செல்வது சிரமமாக இருக்கும், அதனால் இப்போதே அந்த இடங்களுக்கு எல்லாம் அசத்தலாக ஒரு சூப்பர் ட்ரிப் நீங்கள் பிளான் பண்ணலாம் பயணிகளே, குன்னூர் முதல் மாஞ்சோலை வரை தமிழ்நாட்டிற்குள் இருக்கும் இந்த அழகிய இடங்களைக் காண இதுவே சரியான நேரம்!

nilgris

நீலகிரி

கண்கவர் மலைத்தொடர்கள், மயக்கும் மலைகள், அதிர்ச்சியூட்டும் காடுகள், திகைப்பூட்டும் ஆறுகள் மற்றும் வசீகரிக்கும் தேயிலை தோட்டங்கள் போன்ற அற்புதமான இடங்களால் நீலகிரி நிரம்பியுள்ளது எனலாம். ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய மூன்று நம்பமுடியாத மலை வாசஸ்தலங்களைக் கொண்ட நீலகிரி மாவட்டம், வசீகரிக்கும் இயற்கை அழகுடன் நம் மனதை மயக்குகிறது. பழங்குடியினர் அருங்காட்சியகம், முதுமலை புலிகள் காப்பகம், குன்னூரின் சிம்ஸ் பார்க் மற்றும் டால்பின் நோஸ், ஊட்டியின் பைகாரா நீர்வீழ்ச்சி, அவலாஞ்சி, சாக்லேட் பேக்டரி, பூங்காக்கள் என உங்கள் சுற்றுலாவை இதமாக கொண்டாடலாம்.

kodaikanal

கொடைக்கானல்

இந்தியாவின் மிகவும் பிரபலமான தேனிலவு ஸ்தலங்களில் ஒன்றான கொடைக்கானல் அழகான காலநிலை, மூடுபனியுடன் கூடிய அழகுபடுத்தப்பட்ட பாறைகள் மற்றும் நீர்வீழ்ச்சி ஆகியவை ஒன்றாக இணைந்து ஒரு சரியான பயணத்திற்கான சிறந்த அமைப்பை உருவாக்குகின்றன. கொடைக்கானல் ஏரி, பியர் சோலா நீர்வீழ்ச்சி, குணா குகைகள், தலையாறு நீர்வீழ்ச்சி, பூங்காக்கள், போட்டிங் என கொடைக்கானல் நீங்கள் இயற்கையோடு இணைந்திருக்க ஒரு வழியை அமைக்கிறது.

theni

தேனி

பசுமை மற்றும் அழகான நீர்வீழ்ச்சிகளால் சூழப்பட்ட தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு சிறிய அழகான மாவட்டமாக பல அழகிய கண்கவர் சுற்றுலாத் தலங்களுக்கு தாயகமாக உள்ளது. இணையற்ற பசுமையால் நிரம்பியுள்ள தேனி ஏராளமான ஆறுகள் மற்றும் அணைகளோடு 27 காடுகளின் இருப்பிடமாகும். உலகின் மிக உயரமான இயற்கை தேயிலை தோட்டமான கொழுக்குமலை, அழகிய மேகமலை, கும்பக்கரை அருவி, சுருளி நீர்வீழ்ச்சி, தேனியின் துடிப்பான உள்ளூர் சந்தைகள் என தேனி நம்மை வியக்க வைக்கிறது.

coimbatore

கோவை

பழங்கால கோவில்கள் முதல் கம்பீரமான புதிய கட்டிடங்கள் வரை, மூச்சடைக்கக்கூடிய மலைகள் வரை கோவையில் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலை கோவையின் முக்கிய ஈர்ப்பாகும். வைதேகி நீர்வீழ்ச்சி, வெள்ளியங்கிரி மலைகளில் ட்ரெக்கிங், கொடிவேரி அணை, சிறுவாணி நீர்வீழ்ச்சியுடன் பல கோவில்களுக்கு செல்வதுடன் சுவையான உணவுகளையும் நீங்கள் ருசித்து மகிழலாம்.

yercud

ஏற்காடு

தமிழ்நாட்டின் செவ்வாராயன் மலைகளில் அமைந்துள்ள ஏற்காடு, கிழக்குத் தொடர்ச்சி மலையில் ஏராளமான பசுமை நிறைந்த மலைவாசஸ்தலமாகும். பொதுவாக 'ஏழைகளின் ஊட்டி' என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி ஆங்கிலேயர்களின் காலத்துக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டுள்ளது. 4970 அடி உயரத்தில் அமைந்துள்ள ஏற்காடு காபி தோட்டங்கள் மற்றும் சிறந்த வானிலைக்கு பெயர் பெற்றது. ஏற்காடு ஏரி, பகோடா பாயின்ட், கிளியூர் நீர்வீழ்ச்சி, பிரைவேட் பர்ட்ஸ் பார்க் என ஏற்காட்டில் நீங்கள் நிறைய இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம்.

manjolai1

மாஞ்சோலை

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் அடர்ந்த காடுகளுக்குள் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக நம்மை வரவேற்கிறது மாஞ்சோலை. இந்த ஆய்வு செய்யப்படாத பகுதி கடல் மட்டத்தில் இருந்து 1160 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால் ஆண்டு முழுவதுமே வானிலை இதமாக இருக்கிறது. டார்சன் குளம், காக்காச்சியில் உள்ள மினி கோல்ப் மைதானம், காக்காச்சி ஏரி, குதிரைவெட்டி, குட்டியார் அணை, மணிமுத்தாறு தேயிலை எஸ்டேட், மாஞ்சோலை தேயிலை எஸ்டேட், மணிமுத்தாறு அருவி, அப்பர் கோதையார் அணை ஆகியவை மாஞ்சோலை பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடங்களாகும்.

kanniyakumari

கன்னியாகுமரி

அரேபிய, இந்திய மற்றும் வங்காள விரிகுடா ஆகிய மூன்று கடல்களின் எல்லையில் அமைந்துள்ள கன்னியாகுமரி இந்திய தீபகற்பத்தின் தென்கோடி முனையாகும். இங்கே நீங்கள் மூன்று கடல்களின் டர்க்கைஸ் நீலம், அடர் நீலம் மற்றும் கடல் பச்சை நீரை நீங்கள் தெளிவாக வேறுபடுத்தி அறியலாம். சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயத்தின் சிறந்த காட்சியை அனுபவிக்க, நீங்கள் திரிவேணி சங்கம் பாயின்ட், கோயில்கள் மற்றும் விவேகானந்தர் பாறை நினைவகம், திற்பரப்பு அருவி, குற்றாலம் அருவி, ஒலக்கருவி அருவி பார்த்து ரசிப்பதோடு பலவகையான சுவையான உணவுகளையும் ருசிக்கலாம்.

நீங்கள் இந்த இடங்களில் எந்த இடத்திற்கு இந்த மாதம் செல்லப் போகிறீர்கள்?

More News

    Read more about: travel guide tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+