Search
  • Follow NativePlanet
Share
» »ஸ்கை டைவிங் இந்தியாவுல எங்கவெல்லாம் இருக்கு தெரியுமா ?

ஸ்கை டைவிங் இந்தியாவுல எங்கவெல்லாம் இருக்கு தெரியுமா ?

ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி-ன்னு சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கான சிறந்த தேர்வு தான் இந்த ஸ்கை டைவிங். நம்ம நாட்டுல இது எங்க இருக்கு தெரியுமா ?

ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி-ன்னு சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கான சிறந்த தேர்வு தான் இந்த ஸ்கை டைவிங். சுமார், 2000 அடி உயரத்தில இதற்குனே பிரத்யேகமான விமானத்தில இருந்து முதுகுல பாராசூட் கட்டிக்கிட்டு குதிக்குற விளையாட்டுதான் இது. ஆனா, இது மற்ற விளையாட்டுக்களைப் போல் அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும், தகுந்த பயிற்சி பெற்ற பயிற்றுனர்கள் உதவியுடன் ஒரு சில இடங்களில் மட்டும் ஸ்கை டைவிங்ல ஈடுபடலாம். வாங்க, இந்தியாவில் ஸ்கை டைவிங் செய்ய சிறந்த இடங்கள் எது என பார்க்கலாம்.

தானா

தானா


போபாலில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தானா என்னும் சிறிய நகரத்தை சுற்றிப்பார்க்க ஏரானமான தலங்கள் உள்ளன. இவற்றில் ஸ்கை டைவிங் மிகவும் பிரபலமானது. 4,000 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் போது ஏற்ப்படும் இதயத்தை உறைய வைக்கும் அனுபவம் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாததாய் இருக்கும். அந்த அனுபவத்தை இங்கே பெறமுடியும்.

Skydive Andes Chile

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி


அடஅடடா... நம்ம பாண்டிச்சேரியா... அட ஆமாங்க, நம்ம ஊர் பாண்டிச்செரியிலும் கூட இப்போது காகினி என்னும் தனியார் நிறுவனத்தால் ஸ்கை டைவிங் ஆரம்பிக்கப்படுள்ளது. வார விடுமுறையை கொண்டாட பாண்டிச்சேரி செல்பவராக இருந்தால் இந்த சாகசத்தையும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். அழகு நிறைந்த பாண்டிச்சேரியை வானத்தில் இருந்த ரசிப்பது எத்தனை ஆனந்தமாக இருக்கும். அடுத்த முறை டோன்ட் மிஸ் இட்.

Robert Engberg

தீசா

தீசா

இந்தியாவில் ஸ்கை டைவிங் தலைநகரம் என்றால் அது தீசாவாகத்தான் இருக்கும். ஏனெடனறாடல நாட்டிலேயே இங்கு தான் முதன் முதலாக ஸ்கை டைவிங் துவங்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த தீசா என்ற இடம் ஏரி ஒன்றின் ஓரத்தில் அமைந்திருக்கும் அழகிய பகுதி. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள், சாகச விரும்பிகள் ஸ்கை டைவிங் செய்ய இங்கு வருவது வழக்கம். ஸ்கை டைவிங் செய்யும் முன்பு முறையான பயிற்சியும் இங்கே அளிக்கப்படுகிறது. குஜராத் செல்கையில் தவறாமல் இங்க சென்று வாருங்கள்.

paulmcenany

மைசூர்

மைசூர்


விமானத்தில் பறந்துபோய் குறிப்பிட்ட உயரத்தில் இருந்து குதித்துப் பறக்கும் ஸ்கை டைவிங், உலகம் முழுக்க உள்ள சாகச விரும்பிகளுக்கு பிடித்தமான ஒன்று. இதை நம்ம ஏரியாவில் முயற்சி செய்ய மைசூர் நல்ல இடம். இதற்காக பிரத்யேகப் பயிற்சி எடுத்து தன்னந்தனியாகவும் அல்லது பாரா க்ளைடிங் போலவே குழுவாகவும் குதிக்கும் வசதி உள்ளது.

Skydive Andes Chile

டிராப் ஜோன்

டிராப் ஜோன்


மைசூரில் இருக்கும் சாமுண்டி மலையில் டிராப் ஜோன் என்ற தனியார் நிறுவனத்தால் ஸ்கை டைவிங் ஏற்பாடு செய்யப்படுகிறது. மூன்று விதமான ஸ்கை டைவிங் முறைகளில் நாம் ஒன்றை தேர்ந்தெடுத்து அப்படிப்பட்ட முறையில் ஸ்கை டிவிங் செய்யலாம். முதலாவது வகை ஸ்டேடிக் ஜம்ப் எனப்படும் வழக்கமான ஸ்கை டைவிங் ஆகும். இதில் தனியாக ஒருவர் வானத்தில் சிறிது நேரம் மிதந்துவிட்டு பின் பாராசூட் மூலம் தரையிறங்குவது ஆகும். இரண்டாவது டெண்டம் ஜம்ப் எனப்படும் பயற்சியாளர் ஒருவருடன் சேர்ந்து குதிப்பது ஆகும். தனியாக குதிக்க பயப்படுபவர்கள் இம்முறைப்படி குதிக்கலாம். மூன்றாவது வேகமாக தரையிறங்கும் முறையாகும். இம்மூன்று முறைகளில் எதோ ஒரு வகையில் நாம் குதிக்கலாம்.

Paul

அம்பி

அம்பி

மும்பையில் இருந்து இரண்டு மணி நேர சாலைப் பயணத்தில் அம்பி பள்ளத்தாக்கை அடையலாம். அரண்மனைகள், கோவில்கள், நீர் வழிப் பாதைகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளிட்டவை நிறைந்த செழிப்பான பகுதி தான் இது. ஆண்டு தோறும் இங்குள்ள வறலாற்று சின்னங்களை கண்டு ரசிக்கவும், பசுமையை அனுபவிக்கவும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

ryan harvey

10,000 அடி உயரத்திலிருந்து

10,000 அடி உயரத்திலிருந்து


இந்தியாவில் ஸ்கை டைவிங் சிறந்த இடம் என அம்பி பெயர்பெற்றுள்ளது. இங்கு மட்டும் தான் 10,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்ய ஏற்ற வகையில் புவியியல் அமைப்பு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அத்தனை அடி உயரத்தில் இருந்து குதிக்கையில் அற்புதமான இயற்கை காட்சிகளையும் நாம் இங்கே காண முடியும்.

Skydive Andes Chile

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+