Search
  • Follow NativePlanet
Share
» »CMBT, மாதவரம், கிளாம்பாக்கம் – எந்த பஸ் ஸ்டாண்ட்டில் என்னென்ன பேருந்து சேவைகள் கிடைக்கும்?

CMBT, மாதவரம், கிளாம்பாக்கம் – எந்த பஸ் ஸ்டாண்ட்டில் என்னென்ன பேருந்து சேவைகள் கிடைக்கும்?

அதிநவீன வசதிகளுடன், மிகப்பெரிய அளவிலான பேருந்து சேவைகள் சென்னையின் புதிய பேருந்து நிலையமான கிளாம்பாக்கத்தில் செயல்பட்டாலும் கூட, இந்த புதிய பேருந்து நிலையத்தை சென்னை மக்கள் பெரிதாக வரவேற்கவில்லை. காரணம், இது சென்னையை விட்டு வெகு தூரத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வை தருகிறது. இந்நிலையில், CMBT, KMBT, மாதவரம் என 3 பெரிய பேருந்து நிலையங்கள் இருந்தாலும் எந்தெந்த பேருந்து நிலையத்தில் என்னென்ன பேருந்துகள் ஓடுகின்றன என்பது சென்னை மக்களுக்கே ஒரு குழப்பமாக இருக்கிறது. இந்த 3 பேருந்து நிலையங்களிலும் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்!

அதிருப்தியில் சென்னை மக்கள்

கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் நெரிசலைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சி, சேலம், திருவண்ணாமலை மற்றும் பிற டெல்டா மற்றும் வடக்குப் பகுதிகளுக்குச் செல்லும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) மற்றும் அனைத்து மொஃபுசில் பேருந்து சேவைகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு ஒரு மாத காலம் ஆகிறது. ஆனாலும் இந்த புதிய பேருந்து நிலையத்தை சென்னை வாசிகள் பெரிதாக விரும்பவில்லை என்றும் 'பஸ் ஏறி ஊருக்கு செல்லலாம், ஆனால் பஸ் ஸ்டாண்ட்டிற்கு செல்வதே ஊருக்கு செல்வதை போன்று இருக்கிறது' என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Kilmabakkam bus stand

மாதவரத்தில் இருந்து புதிய பேருந்து சேவைகள்

இதனையடுத்து வடசென்னை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, கோவை. திருநெல்வேலி, மதுரை உட்பட தென் மாவட்டங்களுக்கும் விழுப்புரம், கும்பகோணம், சேலம், புதுச்சேரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்லும் பேருந்து சேவைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. முன்னதாக மாதவரம் பேருந்து நிலையம் முற்றிலும் ஆந்திரா செல்லும் பேருந்து சேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

கோயம்பேட்டில் (CMBT) இருந்து செயல்படும் பேருந்து சேவைகள்

1. பிளாட்பாரம் 1 - காஞ்சிபுரம், செய்யாறு, புதுச்சேரி இசிஆர், கடலூர், சிதம்பரம், நெய்வேலி, வடலூர், விழுப்புரம், செஞ்சி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, பெங்களூரு

2. பிளாட்பாரம் 2 - பிளாட்பாரம் 2 இல் புதிய சேவைகள் விரைவில் துவங்கப்படும்

3. பிளாட்பாரம் 3 - ஆற்காடு, சித்தூர், வேலூர், குடியாத்தம், பெரம்பலூர், ஆம்பூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர்

4. பிளாட்பாரம் 4 - வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கும்பகோணம், மயிலாடுதுறை, திருநள்ளார், கும்பகோணம், கோயம்புத்தூர், ஊட்டி, கூடலூர், குருவாயூர், எர்ணாகுளம், திருச்சூர், திருப்பூர், ஈரோடு, கோபிசெட்டிபாளையம்

5. பிளாட்பாரம் 5 - மதுரை, மேலூர், திருமங்கலம், நத்தம், உசிலம்பட்டி, விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், செங்கோட்டை, சங்கரன்கோவில், பத்தனம்திட்டா, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி

6. பிளாட்பாரம் 6 - செங்கோட்டை, விளாத்திக்குளம், குலசேகரபட்டினம், திருசெந்தூர், திருவனந்தபுரம், மார்த்தாண்டம், கன்னியாகுமரி, நாகர்கோயில், பாபநாசம், பொள்ளாச்சி, பழநி, குமுளி, கம்பம், தேனி, போடி, திண்டுக்கல், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி.

kilambakkambusstand

கிளாம்பாக்கத்திலிருந்து (KCBT) இயக்கப்படும் பேருந்து சேவைகள்

1. பிளாட்பாரம் 1 - கன்னியாகுமரி, செங்கோட்டை, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மார்த்தாண்டம்

2. பிளாட்பாரம் 2 - திருவனந்தபுரம், திசையன்விளை, குட்டம், குலசேகரம், சிவகாசி, உடன்குடி, கருங்கல், கன்னியாகுமரி, பாபநாசம், திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மார்த்தாண்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

3. பிளாட்பாரம் 3 - ராமேஸ்வரம், ஏர்வாடி, ஒப்பிலான், கமுதி, காரைக்குடி, வீரசோழன், கீரமங்கலம், சாயல்குடி, சிவகங்கை, தேவக்கோட்டை, தொண்டி, பரமக்குடி, பொன்னமராவதி

4. பிளாட்பாரம் 4 - மன்னார்குடி, பேராவூரணி, பொள்ளாச்சி, போடிநாயக்கனூர், பட்டுக்கோட்டை, தேனி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தஞ்சாவூர், குமளி, கும்பகோணம், கம்பம், கரூர்

5. பிளாட்பாரம் 5 - அரியலூர், ஒரத்தநாடு, கும்பக்கோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், துறையூர், நன்னிலம், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, பெரம்பலூர், பேராவூரணி, மயிலாடுதுறை, மன்னார்குடி, வேளாங்கண்ணி

6. பிளாட்பாரம் 6 - மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருவாரூர், நாமக்கல், திருப்பூர், சேலம், குருவாயூர், கோவை, கரூர், ஈரோடு, எர்ணாகுளம், ஊட்டி

7. பிளாட்பாரம் 7 - செங்கம், செஞ்சி, திருவண்ணாமலை, போளூர், மேல்மலையனூர், வந்தவாசி

8. பிளாட்பாரம் 8 - திருக்கோவிலூர், திண்டிவனம், சங்கராபுரம், அரியலூர், கள்ளக்குறிச்சி, ஜெயங்கொண்டம், விழுப்புரம்

9. பிளாட்பாரம் 9 - கடலூர், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், திட்டக்குடி, நெய்வேலி, புதுச்சேரி, வடலூர், விருதாச்சலம்

More News

Read more about: chennai tamilnadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+