Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » துல்ஜாபூர் » வானிலை

துல்ஜாபூர் வானிலை

பயணிகள் துல்ஜாபூருக்கு சுற்றுலா விஜயம் ஏற்ற பருவ காலம் குளிர்காலமே ஆகும். இக்காலத்தில் துல்ஜாபூர் இனிமையான குளுமையான சூழலுடன் காணப்படுகிறது. எனினும் ஜுலை முதல் மார்ச் வரையிலான் இடைப்பட்ட காலத்தில் மழைக்காலம் மற்றும் குளிர்காலம் நிலவும் சூழலில் துல்ஜாபூரை சுற்றிப்பார்ப்பது சிறந்தது.

கோடைகாலம்

மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை துல்ஜாபூரில் கோடைக்காலம் நிலவுகிறது. வெப்பம் அதிகமாக காணப்படும் இக்காலத்தில் வெப்பநிலை 42°C மேலாக காணப்படுகிறது. பொசுக்கும் வெயில் காரணமாக கோடைக்காலத்தில் துல்ஜாபூருக்கு பயணம் செய்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாக கருதப்படுகிறது.

மழைக்காலம்

ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை துல்ஜாபூர் பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் துல்ஜாபூரில் மிதமான மழைப்பொழிவு காணப்படுகிறது. தகிக்கும் கோடைக்குப்பின் வரும் இந்த மழைக்காலம் துல்ஜாபூரில் பெரிது வரவேற்கப்படுகிறது.

குளிர்காலம்

நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை துல்ஜாபூரில் குளிர் காலம் நீடிக்கின்றது. இக்காலத்தில் சூழல் ஈரப்பதம் பெரிதும் குறைந்து வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 12°C என்ற அளவில் காணப்படுகிறது.