உதய்பூர் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Udaipur, India 23 ℃ Clear
காற்று: 11 from the SW ஈரப்பதம்: 19% அழுத்தம்: 1007 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 23 Oct 21 ℃ 71 ℉ 35 ℃95 ℉
Tuesday 24 Oct 21 ℃ 70 ℉ 35 ℃96 ℉
Wednesday 25 Oct 23 ℃ 73 ℉ 35 ℃95 ℉
Thursday 26 Oct 23 ℃ 73 ℉ 35 ℃96 ℉
Friday 27 Oct 23 ℃ 73 ℉ 35 ℃95 ℉

உதய்பூர் நகரத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள உகந்த காலம் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதத்துக்கு இடைப்பட்ட காலமாகும். இக்காலத்தில் பருவநிலை குளுமையாகவும் இனிமையாகவும் உள்ளது.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜுன் வரை): மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம், ஜூன் மாதம் வரையில் நீடிக்கின்றது. இக்காலத்தில் வெப்பம் மிகவும் கடுமையாகவும் அசௌகரியத்தை தருவதாகவும் உள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக இக்காலத்தில் முறையே 45° C மற்றும் 23° C காணப்படுகிறது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): உதய்பூர் பிரதேசம் ஜுலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் மிகக்குறைந்த அளவு மழையையே பெறுகிறது. மிகக்குறைந்த மழைப்பொழிவே காணப்படும் இக்காலத்தில் இப்பகுதி கடுமையான ஈரப்பதத்துடன் காணப்படுகிறது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை): உதய்பூரின் குளிர்காலம் டிசம்பர் மாதத்தில் துவங்கி பிப்ரவரி வரை நீடிக்கின்றது. இனிமையான சுற்றுப்புறச்சூழல் நிலவும் இக்காலமே இந்த அழகிய வரலாற்று நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள மிக உகந்த காலமாக கருதப்படுகிறது. இக்காலத்தில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக முறையே 28° C மற்றும் 3° C நிலவுகிறது.