எப்படி அடைவது

ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதான சுற்றுலா நகரமான உதய்பூர் மற்ற முக்கிய அருகாமை நகரங்களுடன் பேருந்து வசதிகளை கொண்டுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசுப்போக்குவரத்து பேருந்துகள் உதய்பூர் மற்றும் இதர நகரங்களுக்கு அதிக அளவில் இயக்கப்படுகின்றன. தங்கள் பயணத்திட்டம் மற்றும் வசதி தேவைக்கேற்ப பயணிகள் குளிர்சாதன மற்றும் வால்வோ பெருந்துகளையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இவை டெல்லி, அஹமதாபாத் மற்றும் ஜெய்பூரிலிருந்து உதய்பூர் நகரத்துக்கு இயக்கப்படுகின்றன.