பழமையான ஹிந்துக்களின் பாரம்பரியத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது உஜ்ஜைன் நகரத்தில் உள்ள கால பைரவர் கோவில். இந்த கோவில் ஆன்மீக அறிவியல் சடங்குகளுடன் தொடர்பில் உள்ளது.
கால பைரவர் என்பது சிவபெருமானின் கடுமையான ருத்ர தாண்டவத்தை குறிக்கும். புனிதமான இந்த கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களை தினசரி காணலாம். கோவில் வளாகத்தில் உடம்பு முழுவதும் சாம்பல் பூசிய சாதுக்களை பார்க்கலாம்.
கோவிலில் அழகிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் ஒரு ஆலமரம் உள்ளது. அதனடியில் ஒரு சிவலிங்கம் காணப்படுகிறது. இந்த சிவலிங்கம் நந்தி சிலைக்கு எதிரில் உள்ளது.
இந்த கோவிலைச் சுற்றி பல புராணக் கதைகள் பொறிக்கப்பட்டுள்ளன. தன் அடிமனதில் இருந்து வேண்டுபவர்களுக்கு நினைத்த காரியம் நடக்கும் என்று நம்பப்படுகிறது. மகாசிவராத்திரி அன்று இந்த கோவில் வளாகத்தில் பெரிய திருவிழா நடைபெறும்.



Click it and Unblock the Notifications