மங்கள்நாத் என்ற மங்களகரமான கோவில் சிவபெருமானுக்காக உஜ்ஜைன் நகரத்தில் கட்டப்பட்ட கோவிலாகும். பரப்பராக இருக்கும் நகரத்தில் இருந்து சற்று தொலைவில் இந்த கோவில் ஷிப்ரா நதியை ஒட்டி அமைந்துள்ளது.
மத்ஸ்ய புராணத்தின் படி மங்கள்நாத் தான் செவ்வாய் கோளின் பிறப்பிடம் என்று நம்பப்படுகிறது. இங்கு தரிசனம் செய்தால் சொல்ல முடியாத அளவிற்கு மன அமைதி கிடைக்கும்.
மேலும் நம் பூமியை கடக்கும் முதல் தீர்க்க ரேகை சரியாக இந்த கோவிலை தாண்டி தான் செல்கிறது. அதனால் இங்கே இருந்து கோள்களை சரியாக பார்க்க முடிவதால் இது புகழ் பெற்று விளங்குகிறது.
கோவில் சன்னதி இங்கு வரும் பக்தர்களுக்கு மன அமைதியை தருகிறது. இந்த கோவில் வானியல் ஆய்வுகளுக்கும் சிறந்த இடமாக விளங்குகிறது. செவ்வாய்கிழமைகள் தான் இந்த கோவிலில் விசேஷம் என்பதால் இந்த நாளில் வேண்டியது நடக்கும் என்று நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications