நவகரஹ மந்திர் ஷிப்ரா நதிக்கரியில் அமைந்துள்ள ஒரு கோவில். உஜ்ஜைன்னில் இருக்கும் கோவில்களிலேயே இது ஒரு தனித்துவம் வாய்ந்த கோவிலாகும். இது நம் சூரியக் குடும்பத்தின் கிரகங்களுக்காக கட்டப்பட்ட கோவில்.
உஜ்ஜைன் மக்களிடையே எப்போதுமே ஜோதிடம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த நகரத்திலயே இங்குள்ள திரிவேணி காட் தான் மிகவும் மங்களகரமான இடமாக பார்க்கப்படுகிறது.
இந்த கோவிலில் எப்போதும் கூட்டம் அலைமோதும், முக்கியமாக அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில். திரிவேணி தீர்த்தம் என்றும் இந்த இடத்தை உள்ளூர்வாசிகள் அழைக்கின்றனர்.
உச்சி நகரத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு பல வகையான போக்குவரத்துகள் மூலம் வரலாம். பண்டைய காலத்தில் இந்த நகரில் வானவியல் படிப்புகள் நடத்தப்பட்டன என்று இவ்வூர் மக்கள் நம்புகின்றனர். இங்குள்ள கடவுளுக்கு தேங்காய், பூக்கள் மற்றும் குங்குமத்தை படைக்கின்றனர் பக்தர்கள்.



Click it and Unblock the Notifications