பிரபலமான சுற்றுலா மையமாகிய `சிரொய் கஸ்ங்க்' மலை உச்சி கடல் மட்டத்திலிருந்து 2.835 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த இடம் இரண்டு காரணங்களுக்கு மிகவும் பிரலமானது.
முதலாவதாக உக்ருள் முழுவதும் பாயும் பெரிய ஆறுகள் இங்கு உள்ள முக்கியமான சரிவுகள் மற்றும் பிளவுகளில் இருந்தே தொடங்குகின்றன. இரண்டாவதாக, மிகப் பிரபலமான சிரொய் அல்லிகள் இந்த இடத்தில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த பூக்கள் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட குறுகிய காலத்தில் மட்டுமே பூக்கின்றன.
இங்கு மட்டுமே காணப்படும், சிரொய் அல்லி (மணிப்பூர் மாநில மலர்) மலர்கள், உலகம் முழுவதும் இருந்து பல தாவரவியலாளர்களை தன் பால் ஈர்கிறது. உள்ளூர் மக்கள் கஸ்ஹிங்க் டிம்ரவொன் என அழைக்கின்றனர். அவர்கள் ஒரு வகையான ஆவி இந்த மலரில் வசிப்பதாக நம்புகின்றனர்.
சிரொய் கஸ்ங்க் மலை உச்சியானது பலவகையான அரிய பறவைகளின் இருப்பிடமாக திகழ்கிறது. இங்கு திருமதி ஹியூம் பார்-பெக்ட் ஃபீசன்ட் மற்றும் ப்ளித் இன் ட்ரகோபான் போன்ற அரிய பறவைகள் காணப்படுகின்றன. இது மாவட்ட தலைமையகத்தில் இருந்து கிழக்கே 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.