Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உத்தர்காஷி » ஈர்க்கும் இடங்கள் » குதேதி தேவி கோயில்

குதேதி தேவி கோயில், உத்தர்காஷி

19

குதேதி தேவி கோயில், உத்தர்காஷியில் உள்ள ஒரு புராதனமான கோயிலாகும். இக்கோயிலில் தற்போது உள்ள பூசாரி, பூசாரி வம்சத்தின் 14 ஆம் தலைமுறையைச் சார்ந்தவர் ஆவார்.

இக்கோயிலுடன் தொடர்புபடுத்தி ஒரு விறுவிறுப்பான கதை சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் கோட்டாவின் மன்னன், கங்கோத்ரிக்கு யாத்திரை செல்லும் வழியில் தன் பணப்பையைத் தவறவிட்டு விட்டார்.

தன் செலவுகளுக்கு பணம் இல்லாத மன்னர் மிகவும் மனவேதனையடைந்தார். இவ்வாறு மனமுடைந்த மன்னன், உத்தர்காஷிக்குத் திரும்பி, விஸ்வநாத் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அவரது பணப்பை மீண்டும் கிடைத்து விட்டால், அக்கிராமத்தில் வசிக்கும் பொருத்தமான இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாக சத்தியம் செய்தார்.

கடைசியில், அவரது பணப்பை, அவர் வைத்திருந்த பணம் மொத்தத்துடன் கோயில் பூசாரி ஒருவரால் கண்டுபிடித்துத் தரப்பட்டது. இது மன்னனை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது.

அந்த பூசாரியிடமே தன் மகளுக்கேற்ற பொருத்தமான மாப்பிள்ளையை பார்க்கக் கோரினார். விரைவில், பூசாரி பார்த்த வரனுக்கே மன்னன் தன் மகளை மணமுடித்து வைத்தார்.

ஆனால், இளவரசி, தன் குல தெய்வமான குதேதி தேவியிடம் இருந்து தன்னைப் பிரித்து அழைத்துச் செல்லப் போகும் அத்திருமணத்தைக் குறித்து, ஆரம்பம் முதலே அதிருப்தி கொண்டிருந்தாள்.

இளவரசியும், அவளது கணவனும் குதேதி தேவியிடம் இப்பிரச்சினைக்கு நல்லதோர் முடிவு வழங்கும்படி வேண்டினர். அதன் விளைவாக, குதேதி தேவி அவர்களது கனவில் தோன்றி, அவர்களது நிலத்தில் தன்னை ஒரு கல் வடிவில் காணலாம் என்று கூறி மறைந்தார்.

இதனைத் தொடர்ந்து, இளவரசியும் அவளது கணவனும் தெய்வீக மணத்துடன் கூடிய மூன்று கற்களை தங்கள் நிலத்தில் கண்டெடுத்தனர். இக்கற்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் குதேதி தேவிக்கு ஒரு கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Apr,Wed
Check Out
02 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu