உத்தர்காஷியின் முக்கிய ஆன்மீகத்தலங்களுள் ஒன்றான விஸ்வநாத் கோயில், பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்துக் கடவுளான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் எப்போதும் இங்கு மந்திர உச்சாடனம் ஓயாமல் செய்யப்படுவதைக் கேட்கலாம். இக்கோயில் மன்னர் ஞானேஷ்வரரால் கட்டப்பட்டதாகவும், இங்குள்ள சிவனின் திரிசூலம், குஹனால் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த திரிசூலத்தின் அடிவாரப் பகுதி சுமார் 8 அடி 9 அங்குலமும், இதன் உயரம் சுமார் 26 அடியாகவும் அளவிடப்பட்டுள்ளது. மற்றொரு முக்கிய வழிபாட்டுத்தலமாகப் போற்றப்படும், இந்து தெய்வமான சதிக்கு எழுப்பபட்டுள்ள ஷக்தி கோயில், விஸ்வநாத் கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications