விஸ்வா சாந்தி ஸ்தூபி என்றும் அழைக்கப்படும் உலக அமைதி பகோடா, வைசாலிக்கான சுற்றுலாவில் மிகவும் தனித்தன்மை வாய்ந்த பகுதியாகும். இதனை கட்டியவர்கள் ஜப்பானிய பௌத்த மதப்பிரிவான நிப்போன்ஸான் மையோஹோஜி பிரிவினராவார்கள்.
இந்த ஸ்தூபி அமைதியை வலியுறுத்துகிறது. உலக அமைதிக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட ஃபூஜி குருஜி உலக அமைதி பகோடாக்களை உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிறுவ எண்ணிய போது, வைசாலியையும் இதற்கு மிகவும் ஏற்ற இடமாக கருதி இந்த அமைதிக்கான வழிபாட்டுத் தலத்தை கட்டினார்.
வட்ட வடிவ கூரையுடன் இருக்கும் இந்த 125 அடி உயர ஸ்தூபி, 65 மீ விட்டம் கொண்டது. இந்த ஸ்தூபியின் கீழ் பகுதியில் புத்தருடைய நினைவுகளும் மற்றும் கண்ணாடி & தங்கத்தால் பாலிஷ் செய்யப்பட்ட பைபர் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.
காரனேஷன் குளத்திற்கு அருகில் உள்ள இந்த ஸ்தூபி எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் இடமாகும். உலக அமைதி மற்றும் சமூக ஒருங்கிணைவு மூலம் புத்தரின் கோட்பாடுகளை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இடமாக இது உள்ளது.



Click it and Unblock the Notifications