வால்ப்பாறையில் இருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் இந்திரா காந்தி வன உயிர் பாதுகாப்பு மையத்தின் ஒரு பகுதியாக புல் குன்று இருக்கின்றது. வனவிலங்குத் துறை பாதுகாவலரிடம் இருந்து அனுமதி பெறாமல் புல் குன்றினை பார்வையிட முடியாது.
ஆனால், நீங்கள் வால்ப்பாறைக்கு வந்துவிட்டு பார்க்காமல் செல்லக்கூடாத இடங்களில் இதுவும் ஒன்று. இது பாதுகாக்கப்பட்ட இடம், இங்கே பல்வேறு தாவரங்களும், விலங்கினங்களும் அவற்றின் இயற்கை வசிப்பிடங்களில் இருக்கின்றன.
பண்டைக்கால பசுமைநிறைந்த சுற்றுச்சூழலையும், மலை மற்றும் காடுகளை பார்வையிடும் அற்புதமான காட்சி அமைப்பையும் ஒருங்கே இணைத்து கொடுக்கிறது இந்த புல் குன்று.
ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை இந்த புல் குன்றினைப் பார்ப்பதற்கான சிறந்த காலம். இது கடல்மட்டத்தில் இருந்து 2400 மீட்டர்களுக்கு மேல் அமைந்து இருக்கிறது.



Click it and Unblock the Notifications