Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வாரணாசி » ஈர்க்கும் இடங்கள் » பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி

60

பிஹெச்யு என்றழைக்கப்படும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அதன் உருவாக்கத்துக்கான பெருமையை, இந்தியாவின் சிறந்த தேச பக்தியாளர், சமூக ஆர்வலர், கல்வியாளர் மற்றும் அரசியல் சேவகர் என்று பன்முக ஆற்றல்களால் அறியப்பட்ட பண்டித மதன் மோஹன் மாள்வியாவின், அர்ப்பணிப்போடு கூடிய கடின உழைப்பிற்குச் சொந்தமாக்கி கம்பீரமாக நிற்கிறது.         

இப்பல்கலைக்கழகத்தின் அடிக்கல், 1916 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி அப்போதைய இந்திய வைஸ்ராயாகத் திகழ்ந்த ஹார்டிஞ்ச் துரையினால் நடப்பட்டுள்ளது.

இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் எண்ணிக்கையுடனும், சுமார் அறுபது தங்கும் விடுதிகளோடும் கூடிய இது, ஆசியாவிலேயே தங்கும் வசதியுடன் கூடிய மிகப் பெரிய பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. உண்மையில், இது ஒரு காலத்தில் கிழக்கின் ஆக்ஸ்ஃபோர்டு என்று அறியப்பட்டுள்ளது.

பிரதான வளாகம் சுமார் 1300 ஏக்கர் பரப்பளவுடன் காணப்படுகிறது. இது அமைந்துள்ள நிலம் வாரணாசியின் ஆட்சியாளரால் வழங்கப்பட்டிருக்கிறது.

இப்பல்கலைக்கழகம், நகரத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிர்சாப்பூர் மாவட்டத்தின் பர்காச்சா என்ற இடத்தில் மற்றொரு வளாகத்தைக் கொண்டுள்ளது.

இவ்வளாகம், ராஜீவ் காந்தி தெற்கு வளாகம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மேலும், இப்பல்கலைக்கழகம் 14 கற்பிக்கும் ஆசான்கள் மற்றும் 140 துறைகள் கொண்ட நான்கு பிரதான நிறுவனங்களுடன் செயல்பட்டு வருகிறது. இது உலகளவில் 34 நாடுகளிலிருந்து மாணவர்களை ஈர்க்கக்கூடியதாக விளங்குகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed