Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வாரணாசி » ஈர்க்கும் இடங்கள் » காஷி வித்யாபீடம்

காஷி வித்யாபீடம், வாரணாசி

60

மஹாத்மா காந்தி வித்யாபீடம் என்று 1995 ஆம் ஆண்டு பெயர் சூட்டப்பட்ட காஷி வித்யாபீடம், ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்ட இயக்கத்தின் முக்கிய மையமாக இருந்துள்ளது.

இந்த வித்யாபீடம், சிறந்த தேசியவாதியாகவும், கல்வியாளராகவும் நாடெங்கிலும் அறியப்பட்டவரான பாபு ஷிவ பிரசாத் குப்தா அவர்களால் நிறுவப்பட்டதாகும். இவர், மஹாத்மா காந்தி மற்றும் பின்னாளில் இதன் முதல் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை பெற்றவரான டாக்டர்.

பகவான் தாஸ் ஆகிய இருவரின் உதவியோடும் இதனை நிறுவியுள்ளார். தற்செயலாக, பாபு ஷிவ் பிரசாத் குப்தா அவர்கள் தான் பனாரஸில் உள்ள நன்கு அறியப்பட்ட பாரத மாதா கோயிலின் நிர்மாணத்துக்கும் உந்து சக்தியாக இருந்துள்ளார்.

1963 ஆம் ஆண்டில், யூ.ஜி.சி. -யினால் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்ட இந்த வித்யாபீடத்தை மஹாத்மா காந்தி, 1921 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 –ஆம் தேதியில், பசந்த் பஞ்சமி நாளில், பகவத் கீதை மற்றும் குரானின் வாசிப்புகளுக்கிடையில் திறந்து வைத்துள்ளார்.

இதன் முதல் நிர்வாகக் குழு, பிரதான தேசபக்தியாளர்களான மஹாத்மா காந்தி, லாலா லஜ்பத் ராய், ஜவஹர் லால் நேரு, ஜமுனா லால் பஜாஜ், ஆச்சார்ய நரேந்திர தேவ், பி.டி.டாண்டன் ஆகியோருடன் பாபு ஷிவ் பிரசாத் குப்தா மற்றும் டாக்டர். பகவான் தாஸ் ஆகியோரைக் கொண்டதாக இருந்திருக்கிறது.        

இந்த வித்யாபீடத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களுள், சந்திர சேகர் ஆசாத், பண்டித கமலாபதி திரிபாதி, லால் பகதூர் சாஸ்திரி, பி.வி. கேஸ்கர், மணானத்நாத் குப்த், போலா பஸ்வான் சாஸ்திரி, ராமகிருஷ்ண ஹெக்டே மற்றும் பேராசிரியர் ராஜா ராம் சாஸ்திரி ஆகியோர் பின்னாளில் பெருபுகழ் அடைந்த சிலர் ஆவர்.  

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
16 Apr,Tue
Check Out
17 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed