பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவியவரான பண்டித மதன் மோகன் மாள்வியா அவர்களால் நிறுவப்பட்டுள்ள புதிய விஷ்வநாத் கோயில், சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும். இந்த 252 அடி உயர கோயிலின் அடிக்கல் மார்ச் 1931 –இல் நடப்பட்டுள்ளது. இக்கோயிலைக் கட்டி முடிக்க சுமார் 30 ஆண்டு காலம் பிடித்துள்ளது.
வெள்ளை சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயில் கன்ஷியில் உள்ள, முகாலய மன்னரான ஔரங்கசீப் அலாம்கீரால் அழிக்கப்பட்ட, உண்மையான விஷ்வநாத் கோயிலின் அச்சு அசல் நகல் போல் உருவாக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய வளாகமாகக் காணப்படும் புதிய விஷ்வநாத் கோயில் பல்வேறு கடவுளர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஏழு கோயில்களைக் கொண்டுள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோயில் கீழ்த்தளத்திலும், லக்ஷ்மி நாராயண் மற்றும் துர்க்கை கோயில்கள் மேல்தளத்திலும் அமையப்பெற்றுள்ளன.
இக்கோயிலில் உள்ள, வெள்ளை சலவைக்கல்லால் ஆன உயரமான ஷிகாரா இதன் தனிச்சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மூலஸ்தானத்தில் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இதன் உட்புற சுற்றுச்சுவர்களில் கீதை மற்றும் இதர வேதப் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கியமான குறிப்புகள், தெளிவான விளக்கங்களுடன் பொறிக்கப்பட்டுள்ளன.
பண்டித மதன் மோஹன் மாள்வியாவின் முற்போக்கான, பரந்த மனப்பான்மையினால், இக்கோயில் அனைத்து சாதியினர் மற்றும் மதத்தினருக்கும் அனுமதி அளிக்கும் பெருமை வாய்ந்த கோயிலாகத் திகழ்கிறது.



Click it and Unblock the Notifications