மதராஸாயே மொஹமதியா மஸ்ஜித் அல்லது நவாப் சந்தா சாஹிப் மசூதி என்றழைக்கப்படும் இந்த மசூதியானது வேலூரில் ஒரு முக்கியமான வரலாற்றுத்தலமாக அமைந்துள்ளது.
1750ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இம்மசூதியின் வாசல் வடக்குபகுதியில் அமைந்துள்ளது.செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பு பயன்படுத்தி இந்த மசூதியின் கட்டுமான உருவாக்கப்பட்டிருக்கிறது.
வளாகத்தின் மேற்குப்பகுதியில் ஒரு விசாலமான தொழுகைக்கூடம் அமைந்துள்ளது. இதில் வரிசைக்கு நான்கு தூண்களாக இரண்டு தூண் வரிசைகள் காணப்படுகின்றன. மசூதியின் மையப்பகுதியில் வழக்கம் போல குமிழ் கோபுர அமைப்பும் மற்றும் இருபுறமும் தூண்கோபுர மினார்களும் அமைந்துள்ளன.
மசூதியின் நாலா புறமும் அலங்கார விதான வளைவு அமைப்புகளும் காணப்படுகின்றன. மசூதியின் பின்பகுதியில் பக்தர்கள் வணங்கும் மெஹ்ராப் அமைந்துள்ளது. அதன் வலப்புறத்தில் தொழுகை நெறியாளருக்கான பீட அமைப்பு காணப்படுகிறது. கலையம்சம் நிரம்பிய மலர் அலங்கார தோரண சித்தரிப்புகள் இந்த மசூதி முழுவதும் நிரம்பியுள்ளன.



Click it and Unblock the Notifications