வேலூரில் உள்ள பூமாலை வணிக வளாகம் என்பது கிராமப்புற பெண்கள் தயாரித்த கலைப்பொருட்கள் விற்கும் இடமாகும். பனையோலையில் செய்யப்பட்ட பலவித பொருட்கள் இங்கு கிடைக்கின்றன.
கண்ணாடி ஓவியங்கள், பொம்மைகள், பூத்தையல் செய்யப்பட்ட உடைகள், பரிசுப்பொருட்கள், மூலிகைப்பொருட்கள் மற்றும் இதர சமையலறைப்பொருட்கள் ஏராளம் இந்த வணிக வளாகத்தில் கிடைக்கின்றன.
ஒரு கூட்டுறவு அமைப்பாக இயங்கும் இந்த வளாகம் ஏராளமான கிராமப்புற பெண்களில் வாழ்வாதாரமாக செயல்பட்டுவருகிறது. கைவினைப்பொருட்களில் ஆர்வம் உள்ளவர்கள் தவறாமல் இந்த அங்காடிக்கு விஜயம் செய்வது நல்லது.
வேலூரின் ஞாபகார்த்தமாக வீட்டுக்கு எடுத்துச்செல்ல ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றன என்பதோடு இதன் பின்னணியில் உள்ள அடித்தட்டு கிராமியப்பெண்களின் உழைப்புக்கு உதவும் சந்தர்ப்பமும் இங்கு வாய்க்கும்.



Click it and Unblock the Notifications