ரோமன் கத்தோலிக் டையோசீஸ் எனும் இந்த கிறித்துவ தேவாலயம் வேலூர் நகரத்தில் பிஷப் இல்லத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது. 2001ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டபின் இது முக்கியமான ஆன்மீக மையமாக மாறியிருக்கிறது. இந்த வளாகத்தில் உள்ள மணிக்கூண்டு கோபுரம் நாட்டிலேயே மிக உயரமானதாக சொல்லப்படுகிறது.
1952ம் ஆண்டில் மெட்ராஸ் மைலாப்பூர் டையோசீஸ் அமைப்பிலிருந்து பிரிக்கப்பட்டு இந்த வேலூர் டையோசீஸ் துவங்கப்பட்டிருக்கிறது. இதில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் அடங்கியுள்ளன.
இந்த வளாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் கதீட்ரல் தேவாலயத்தில் 18 முக்கிய வரலாற்றுச்சம்பவங்களும் 15 அதிசயங்களும் வண்ணப்பூச்சு கண்ணாடி ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
165 உயரமுள்ள மணிக்கூண்டு கோபுரமும் இங்குள்ளது. 3000 முதல் 5000 வரை மக்கள் கூடும் அளவுக்கு இடவசதியுடன் இந்த புதிய கதீட்ரல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
வேலூர் நகரத்தில் 150000 ரோமன் கத்தோலிக்க பிரிவினர் உள்ளனர். 84 தேவாலயச்சபைகள் இந்நகரத்தில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுப்பின்னணியோடு கூடிய நவீன பிரம்மாண்ட கதீட்ரல் தோற்றத்தோடு வீற்றிருக்கும் ரோமன் கத்தோலிக் டையோசீஸ் தேவாலயம் வேலூருக்கு விஜயம் செய்ய செய்யும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய அம்சமாகும்.



Click it and Unblock the Notifications