வேணூரில் உள்ள மற்றும் ஒரு பஸாதி கோயில் இந்த கல்லு பஸாதி அல்லது தொட்ட பஸாதி என்று அறியப்படும் கோயிலாகும். இது பாறாங்கற்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதால் கல்லு பஸாதி என்று அழைக்கப்படுகிறது.
பெரிய அழகான முற்றத்தை கொண்டிருப்பதால் ‘தொட்ட’ பஸாதி (பெரிய பஸாதி) என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு 5 அடி உயரம் கொண்ட சாந்திநாதர் சிலையைக்காணலாம். சிலையும் இருபுறத்திலும் யக்ஷி மஹாமனஸி மற்றும் யக்ஷ கருடா ஆகிய பாறைச்சிற்பங்களையும் காணலாம்.
இந்தக் கோயில் தீர்த்தங்கரர் சிலை பத்மாசனத்தில் தவ நிலையில் அமர்ந்திருப்பது ஒரு கூடுதல் விசேஷமாகும். கல்லு பஸாதியில் சந்திரநாதா மற்றும் மஹாவீரா என்ற இரன்டு தீர்த்தங்கரர் சிலைகள் காணப்படுகின்றன.
நெருங்கி உற்றுப்பார்த்தால் 24 தீர்த்தங்கரர் வெண்கலச்சிலைகளின் அடிப்பீடத்தில் ஒரு குறிப்பை பார்க்கலாம். இந்த பீடத்திற்கு ஹரி பீடம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த கல்லு பஸாசி வாசல் வடிவமைப்புக்கு(வெளிப்பகுதிக்கு மட்டும்) கடப்பா கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கருவறையில் வலது புறம் சரஸ்வதி சிலையும் இடது புறம் பத்மாவதி சிலையும் காணப்படுகிறது.
இந்த இரண்டு சிலைகளும் கோயிலில் இடம் பெற்றிருப்பதால் இது அம்மானாவர பஸாதி என்றும் அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications