விஜயமந்திரா என்று அழைக்கப்படும் பிஜாமண்டெலை பயணிகள் நிச்சயம் காண வேண்டும். 11-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இவ்விடத்தில் பரமரா காலத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய கோயில் ஒன்று காணப்படுகிறது.
இங்கு முகாலய அரசரான அவுரங்கசிப்பால் கட்டப்பட்ட அலம்கிரி மஸ்ஜித் மசூதி மிகவும் பிரபலம். இக்கோவிலின் அருகில் உள்ள ஒரு பட்டறையில் வரலாற்று புகழ்மிக்க பொருட்களை சேகரித்தும், பாதுகாத்தும் வைத்திருக்கின்றனர்.
படிகள் கொண்ட கிணறு ஒன்றை அங்கு காண முடியும். கிர்ஷ்ணனின் கதைகள் கொண்ட இரண்டு பெரிய தூண்கள் இங்கு அமையப்பெற்றுள்ளன. இந்தியாவின் மைய நகரத்தில் மிகவும் பழமையான கிருஷ்ணனின் வரலாற்றை குறிக்கும் இடமாக இது திகழ்கின்றது.



Click it and Unblock the Notifications