பீமுனிப்பட்டணம் எனும் கடற்கரையே பிம்லி பீச் எனும் பெயரால் அழைக்கப்படுகிறது. பாண்டவ சகோதரர்களில் ஒருவரான பீமனின் பெயரே இந்த கடற்கரைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கொஸ்தனி ஆறு வங்காள விரிகுடாவுடன் கலக்கும் இடத்தில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. பிம்லி - விசாகப்பட்டிணம் பீச் சாலையை ஒட்டியே இந்த கடற்கரையும் நீள்கிறது. அமைதி தவழும் இந்த கடற்கரைப்பகுதி பாதுகாப்பான நீச்சலுக்கும் ஏற்றதாகும்.
2ம் நூற்றாண்டை சேர்ந்த புத்த கலாச்சாரத்தின் சான்றுகள் இப்பகுதியில் உள்ள பவுரலகொண்டா எனும் மலைப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மலை நரசிம்மஸ்வாமி கொண்டா என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு 17ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு கோட்டையின் சிதிலங்கள் மற்றும் ஒரு கல்லறை போன்றவை சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அம்சங்களாக காணப்படுகின்றன. காலனிய ஆட்சிக்காலத்தில் இந்த இடம் டச்சுக்காரர்களின் குடியிருப்பாக இருந்துள்ளது.
தற்போது இப்பகுதியை சுற்றிலும் மீனவக்கிராமங்கள் அமைந்துள்ளன. தேவதாரு எனப்படும் அரியவகை மரங்கள் இந்த கடற்கரைகளில் வானோக்கி உயர்ந்து வளர்ந்துள்ளன.
இவை தவிர சிறிய கோயில்களும் இங்கு காணப்படுகின்றன. இப்படி வித்தியாசமான சூழலுடன் கூடிய நிசப்தம் நிலவும் இந்த பிம்லி கடற்கரையானது பயணிகளை வசியப்படுத்தி, சாந்தப்படுத்தி திருப்பியனுப்புகிறது.



Click it and Unblock the Notifications