ஜகதாம்பா சென்டர் அல்லது ஜகதாம்பா ஜங்க்ஷன் என்று அழைக்கப்படும் இந்த வணிகவளாக கட்டமைப்பு வைசாக் நகரத்தின் முக்கிய அடையாளமாக காட்சியளிக்கிறது. பல்வேறு அங்காடிகளும் பொழுதுபோக்கு அம்சங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட பிரம்மாண்ட நவீன வளாகமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தை ஒட்டியே ஜகதாம்பா எனும் பெயரிலேயே ஒரு சினிமா தியேட்டரும் இடம் பெற்றுள்ளது. மிக நவீன தொழில் நுட்பவசதிகளை கொண்ட இந்த திரையரங்கு விசாகப்பட்டணம் நகரத்தின் முக்கியமான சினிமா திரையரங்காகும்.
இப்பகுதியில் இதர பெரிய வணிக அங்காடிகளும் உணவகங்களும் அமைந்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் இந்த ஜகதாம்பா சென்டருக்கு விஜயம் செய்வது பயனுள்ளதாகவே இருக்கும்.



Click it and Unblock the Notifications