சப்மரைன் மியூசியம் என்றழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் (நிஜ நீர்மூழ்கி கப்பல்) ராமகிருஷ்ணா பீச் எனப்படும் கடற்கரையில் உள்ளது. ஆசியாவிலேயே இதுபோன்ற ஒரே ஒரு அருங்காட்சியகம் எனும் பெருமையை இந்த சப்மரைன் மியூசியம் பெற்றுள்ளது.
ஸ்மிருதிகா என்ற பெயரிலும் இந்த அருங்காட்சியகம் அழைக்கப்படுகிறது. இந்திய கப்பற்படையில் இருந்த குர்சுரா எனும் ரஷ்ய(தயாரிப்பு) நீர்மூழ்கிக்கலம் 2001ம் ஆண்டில் கரைக்கு கொண்டு வரப்பட்டு இப்படி ஒரு ‘நீர்மூழ்கி அருங்காட்சியகம்’ எனும் புதுமையான அமைப்பாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நீர்மூழ்கியை கரைக்கு கொண்டு வருவதற்கான செலவை பிரிமியர் டிஃபென்ஸ் லேப், ஓ.என்.ஜி.சி, விசாகப்பட்டணம் துறைமுகம் மற்றும் தேசிய கப்பல் வடிவமைப்பு ஆய்வு மையம் போன்ற முக்கியமான பொதுத்துறை நிறுவனங்கள் பகிர்ந்து ஏற்றுக்கொண்டன.
இந்த புதுமையான நீர்மூழ்கி அருங்காட்சியகம் அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மனித கண்டுபிடிப்புகளிலேயே மிக முக்கியமான ஒன்றாகிய நீர்மூழ்கு கப்பலின் வடிவமைப்பு, இயந்திர நுணுக்கங்கள் போன்றவற்றை கரையில் இருந்தபடியே தெரிந்த கொள்ள வாய்ப்பளிக்கும் இந்த சப்மரைன் மியூசியம் அருங்காட்சியகம் பயணிகள் மற்றும் இளம் தலைமுறையினர் அவசியம் காணவேண்டிய ஒரு அம்சமாகும்.



Click it and Unblock the Notifications