வைசாக் நகரத்திலுள்ள இந்த ‘வார் மெமோரியல்’ எனும் நினைவுச்சின்னமானது ‘விக்டரி அட் சீ’ (கடலில் கிடைத்த வெற்றி) என்றும் அழைக்கப்படுகிறது. 1971ம் ஆண்டில் நிகழ்ந்த இந்திய-பாகிஸ்தானியப் போரில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் வெற்றியின் ஞாபகார்த்தமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
1996ம் ஆண்டில் இந்திய கப்பற்படைப்பிரிவின் மூலம் இது நிர்மாணிக்கப்பட்டது. இந்த ஸ்தலத்தில் பல ஏவுகணைகளும், வெடிகுண்டுகளும், கவச டாங்கியும், போர்விமானமும் வைக்கப்பட்டுள்ளன.
ஒரு பெரிய கான்கிரிட் சுவரினால் இந்த மெமோரியல் வளாகம் சூழப்பட்டுள்ளது. இதன் உள்ளே இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதியைப்போன்ற ஒரு அழகிய கோபுரத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications