ஸ்ரீ கிருஷ்ணா பலராம் கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த இஸ்க்கான் கோயில் (ISKCON) 1975ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு பக்தர்கள் கடவுளை வணங்குவதற்காக மட்டுமல்லாமல் பகவத் கீதையை வாசிக்கவும் தியானத்தில் ஈடுபடவும் வருவதால் இது மற்ற கோயில்களிலிருந்து வேறுபட்டு விளங்குகிறது.ஆர்வமுள்ள பக்தர்கள் இந்த கோயில் வளாகத்தில் சேவைப்பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.
இந்த கோயிலில் மூன்று வழிபாட்டு பீடங்கள் உள்ளன. இதன் சுவர்கள் முழுவதிலும் ஓவியங்கள் மற்றும் சித்திரப்பொறிப்புகள் காட்சியளிக்கின்றன.
இந்தியர்களை விடவும் வெளிநாட்டு யாத்ரீகர்கள் அதிகம் இக்கோயிலுக்கு ஆன்மீக அமைதியையும் ஞானத்தையும் தேடி வருகை தருகின்றனர். இங்கு யாத்ரீகர்களுக்காக வேத சாரங்கள் குறித்து ஆங்கிலத்தில் சிறப்பு வகுப்புகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.



Click it and Unblock the Notifications