இந்த பாவ்னார் கிராமம் வார்தாவின் சிறப்பான வரலாற்றுப்பின்னணியின் அடையாளமாக விளங்குகிறது. இது தாம் நதிக்கரையில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் பவான் என்றழைக்கப்பட்ட ராஜபுத்திர அரசரின் நினைவாக இது இப்பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்த பாவ்னார் கிராமத்தில் பரம்தம் ஆசிரமம் மற்றும் காந்தி குடி போன்ற இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களும் அமைந்துள்ளன. இங்குள்ள நினைவகத்தில் ஆச்சார்ய வினோபா பாவே’யின் அஸ்தியும் வைக்கப்பட்டுள்ளது.
பாவ்னார் கிராமம் வார்தா நகரத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications